பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 莎霹 ஆறாயிரப்படி குரு பரம்பரையைத் தொடர்ந்து நோக்கினால் பின் பழகிய பெருமாள் சீயர் மேலும், அவ் வாயுதங்களைப் பண்ணி அவர் சந்திதியிலே வைத்துக் கருவறையில் ஒருவருமில்லாதபடி சோதித்துத் திருக்காப் பைச் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுவந்து...” என்று கூறு வதைக் காணலாம். காலை வேளையில் பூட்டைத் திறந்து பார்க்கும்போது சங்கும் சக்கரமும் தரித்துக் கொண்டிருந்தாராம் பெருமாள். திரிசூலத்தையும்-மரு.கத் தையும் அணிந்து கொள்ளவில்லையாம். இதனால் ஒரு சூழ்ச்சி நடந்திருக்கக்கூடும் என்று கருதுவர் சிலர். வேறு குருபரம்பரைக் கதைகளில் இச்செய்தி சிற்சில கூட்டல் கழித்தல்களுடன் காணப்படுகின்றது. பிரபந் நாம்ருதம்' என்ற நூலில் வேங்கடத்தெம்மானுக்குத் திரு மார்பில் இராமாநுசர் திருமகளின் உருவை அமைத்தார் என்ற செய்தி காணப்படுகின்றது மேற்கூறிய வரலாறுகளே:ன்றி இன்னொரு வரலா றும் வழங்கி வருகின்றது. பெரும் பக்தனான தொண்டை மான் சககர வர்த்திக்குச் சங்கு சக்கரங்கள் பேருமானால் அளிக்கப்பெற்றதாக ஐதிகம் ஒன்று உண்டு. திருவேங்கடத் தலபுராணத்தில் இராமாதுசன் பிரார்த்தனைப்படி சீநிவாசன் சங்கு சக்கரம் தரித்த அத்தியாயம் என்பது 29-வது அத்தியாயமாகக் காணப்படுகின்றது. இதில் 'தொண்டைமான் சக்கர வர்த்தி வெற்றி பெரும் பொருட்டு, முன்பு தன் சங்கு சக்கரங்களை அவன் கையில் கொடுதது அவனுக்கு வரம் கொடுத்தபடியாகவே பல நாள் சீநிவாசப் பெருமாள் தன் சங்கு சக்கரங்களை உலகி னர் கண்களுக்குப் புலப்படாதபடி ஒளித்து வைத்திருந்த னன். இதனைக் கருத்திற்கொண்டு திவ்விய கவியும் தலைவியன் பிரிவாற்றாமை கண்டு செவிலி இரங்குந் துறையில்,