பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வடவேங்கடமும் திருவேங்கடமும் முனித்தொண்டை மான்கையில் சங்காழி நல்கி ஒன்மூரல் செவ்வாய்க் கணித்தொண்டை மான்கையில் சங்காழிகோடல் கருமம் அன்றே. -திருவேங்கடத்தந்தாதி-53. [மூரல்-புன்முறுவல்; கனித்தொண்டை-கோவைப் பழம்; சங்கு-வளையல், ஆழி-மோதிரம்). எனப் பாடி மகிழ்ந்துள்ளார் என்று கருதலாம். அப்பெரு மானின் திருவடிவைக் கண்டவர்கள் தம்தம் கருத்துக்கு இயைந்தபடி அரன் என்றும், குமரன் என்றும், மாயவன் என்றும் பலவாறு சொல்லிய சமய வாதங்களால் வேறு பாடு உற்றுப் பகைமை கொள்வார்கள்' என்று காணப் படுகின்றது. இந்தச் சூழ்நிலையில் இராமாநுசர் திருப்பதிக்கு வந்ததாக இத்தலபுராணம் தெரிவிக்கின்றது. பண்டைய வேததெறியோடு திருக்குருக்கூரின்கண் வந்த மெய்ஞ் ஞானத் தமிழ் மறையாகிய திருவாய்மொழி ஒங்கும்படி செய்து, சரசுவதி தலைமேல் கொண்டு பாராட்டும்படி பூர் பாஷ்யம் இயற்றிய எதிராசர் என்று இராமாநுசர் இங்கே குறிக்கப் பெறுவதைக் காண்கிறோம். இவர் வேங்கடமாமலையை அணுகி அங்குள்ள கு தர்க்க வாதி களை வாதத்தால் வென்று அடக்கி வேங்கடத்து. அண்ணலை வாழ்த்தினார்’ என்றும் இத்தல புராணம் நுவல்கின்றது. உலகினர் யாவரும் அறியுமாறு சங்கு சக்கரங்களைத் தாமரைக் கைகளில் தரித்தருளித் தரிசனம் தந்தருள வேண்டும் என்று இராமாநுசர் வேண்டிக் கொள்ள, அவ்வண்ணமே அப்பெருமான் தரிசனம் தருவான்' என்று எதிர்காலம் உரைப்பதுபோல் கூறு. கின்றது. தலபுராணம். இது,