பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வடவேங்கடமும் திருவேங்கடமும் நூற்றாண்டுகளில், தொல்காப்பியர் காலத்திலிருந்து முதலாழ்வார்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் காலம் வரையில் உள்ள காலப்பகுதியில், நிலவியல் கூறுகளின் அடிப்படையில், இம்மலைகட்கு ஏற்பட்ட மாற்றத்துக்கு. ஒரு சான்றாக அமைகின்றது என்றும் விளக்குவர். மேலும் அவர் கூறுவது: "வேங்கடம்" என்று வழங்கும் இப்பகுதியில் இப்பொழுதுகூட மலைகளின் பல்வேறு அழிவு மாற்றங்களைக் காணலாம். கோடைக்காலத்தில் கதிரவனின் கடும் வெப்பமும், மாரிக்காலத்தில் பெய்யும் மழையும் இப்பகுதியிலுள்ள சில பாறைகளைப் பெரும் பெரும் பிறைத்துண்டுகளாகப் பிளவுபடச் செய்துள்ளன. சில பாறைகளைச் சில கூரிய கற்குவியலாகவும் கூழாங் கற்களாகவும் சிதைத்துள்ளன. இன்னும் சிலவற்றை மணலும் மண்ணும் கலந்த மேடுகளாகவும் மாற்றம் அடையும்படிச் செய்து விட்டன. இதனால் இம்மலைப் பகுதியில் தாவரங்கள் தலைகாட்டுவதற்கு வாய்ப்பும் நேரிட்டது. ஒரு காலத்தில் வழுக்கைப் பாறைகளாக இருந்தவற்றில் பசுமையும் செழுமையும் தலைகாட்டத் தொடங்கியது. இப்பொழுது இம்மலைகளில் சிறு புல் பூண்டுகள், காடுகள் என்ற பல்வேறு நிலைத் தாவரங்களைக் காண லாம். இங்ங்னம இம்மலை பூதத்தாழ்வார் காலத்தில் பல்வேறு மாற்றங்கள் அடைந்து மக்கள் வசிப்பதற்கேற்ற நிலையையும் அடைந்துவிட்டது. அதனால் அவர் அம். மலையைக் குறிக்க இளங்கிரி' என்ற சொல்லை ஆண்டுள்ளார் என்பது. இந்த ஆழ்வாரின் இன்னொரு பாடலைக் காட்டி அதில் கோயிலைப் பற்றிய குறிப்பு வருகின்றது என்றும் கூறுவர். அவர் காட்டும் பாடல்: