பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”

இப் பாட்டைப்பாடி, காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்ற கவின்மிகு பெயர் பெற்ற இப்புலவர், தளர்ச்சி மிகுதியால் புடைத்துத் தோன்றும் நரம்பும், மெலிந்த உடலும் உடையளாய், தமிழகத்தின் முதுகுடிப் பிறந்த மூதாட்டி ஒருத்தி, காலையில், களம்சென்ற தன்மகளின் வரவை எதிர்நோக்கி, தலைவாயிற்கண் காத்திருக்கும் தன்முன் பலர் வந்து, “பாட்டி! உன் மகன் பகைவர் படைக்கு அஞ்சிப் புறங்காட்டி ஓடி மறைந்து விட்டான்” என்று உரைத்தாராக, அது கேட்ட அவள், ஆற்றொணாத் துயர் கொண்டு, என் மகன் அவ்வாறு தோற்றுப் புறங்காட்டான்; ஒருக்கால் நீங்கள் கூறுவதுபோல் புறங்காட்டியிருப்பனாயின், அவனுக்குப் பால் ஊட்டி வளர்த்த என் உடலைக் கிழித்து எறிவேன்” எனச் சூளுரைத்து, வாளைக் கையில் கொண்டு களம் புகுந்து, ஆங்கு இறந்து வீழ்ந்து கிடக்கும் வீரர் உடல்களையெல்லாம் புரட்டிப் பார்த்தவாறே சென்றக்கால், ஓரிடத்தே, பல பிணங்களுக்கு அடியில், உடல்சிதைந்து உருக்குலைந்து தானும் ஓர்பிணமாகி வீழ்ந்து கிடக்கும் தன்மகன் உடலைக் கண்டாள்; வீரர் வழிவந்த தன் மகனும் அவ்வீரத்தில் குறையுடையானல்லன் என்பதை அறிந்து, அவள் கொண்ட மகிழ்ச்சி, அவள் அவனைப் பெற்றெடுத்தபோது கொண்ட மகிழ்ச்சியினும் பெரிதாம், என்ற பொருள் அமைந்த புறநானூற்றுப் பாடலைப் பாடிப், பழந்தமிழரின் பேராண்மையைப் புலப்படுத்தித், தமிழரின் உள்ளத்தில் தலையாய இடம் பெற்றுத் திகழ்கிறார்.

காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் நல்ல புலமை நலம் வாய்க்கப் பெற்றவர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்