பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் மன்றத்தில், துணங்கை ஆடலைத் தொடங்கி வைக்கும் முகத்தான், ஆடல் மகளிர்க்குத் தலைக்கை தர, அது கண்டு அரசமாதேவி அவன்பால் சினம் கொண்டு தன் கைக்குவளை மலரை அவன் மீது எறிய ஓங்க, அவள் ‘அம்மையே! எறியாது அதனை எனக்கு ஈந்தருளுக’ எனக் கூறி இருகை விரித்து ஏந்த, அவள் அது செய்யாது சினம்மிகுந்து அவ்விடம் விட்டு அகல, அவன் அவளைத் தடுத்து நிறுத்தித் தான் விரும்பிய அக்குவளை மலரைக் கைக்கொள்ளக் கருதாது போக விடுத்து, விழித்து நின்ற அந்நிகழ்ச்சி ஒன்றையே கொண்டு, “சேரலாத! உன் கைகள், உன்பால் வந்து பரிசில் வேண்டும் இரவலர்க்கு அளிக்கக் குவிந்து கவிழுமே அல்லது, பிறர்பால் சென்று பொருள் வேண்டி இரந்து மலர்ந்து விரியா என்றும், நீ பகைவர்களின் பற்றற்கரிய பேரரண்களையும் எளிதில் பற்றிக் கொள்ளவல்ல பேராற்றல் படைத்தவன் என்றும், புலவர்கள் புகழ்ந்து பாராட்டக் கேட்டுளேன்; அவ்வுரைகள் பொய்யொடுபட்ட புல்லுரைகளாம் என்பதை, இப்போது கண்டேன்; உன் மனைவிபால் உள்ள சின்னம்சிறுகுவளைமலரைப் பெறவேண்டி, உன் இருகைகளும் மலர்ந்து இரக்கின்றன; மனைவிபால் உள்ள குவளை மலர்மீது உன்மனம் சென்றது; இருகை விரித்து இரந்து கேட்டாய் நீ; கொடுக்க மறுத்து விட்டாள் அவள்; அதைக் கைப்பற்ற முடியவில்லை உன்னால். என்னே உன் கொடை! என்னே உன் கொற்றம்! எனக் கூறி, எள்ளி நகையாடுவார் போல், அவன் கொடைவளம், கொற்றத்திலும், காதற்சிறப்பு ஆகிய பல்வேறு நலங்களையும் ஒரு சேரப் பாராட்டிய புலமை கண்டு, அவரைப் போற்றுவோமாக!

“தடக்கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிடுகும்

3