பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகை இலங்கு எயிற்று = வெள்ளிய ஒளி காட்டும் வெண்பற்களும். அமிழ்து பொதி துவர்வாய் = அமிழ்தம் போல் இனிக்கும் குரல் பொதிந்த, பவளம் போல் சிவந்த வாயும். அசைநடை = அன்னம் போல் அசைந்தாடும் நடையும் போலும் பல நலமும் ஒருங்கே பொருந்திய விறலியர் பாடல் சான்று நீடினே உறைதலின் = ஆடல் மகளிரின் பாடல் இன்பத்தை, அளவின்றி நுகர்ந்து, ஆண்டே நெடிது இருந்து விடுவதால் நின் உணராதோர் = உன் இயல்பை முற்றும் உணராதவர். வெள்வேல் அண்ணல்=வெள்ளிய வேலேந்திய தலைமைச் சிறப்பமைந்த சேரலாதன். மெல்லியன் போன்ம் = இன்பத்துறையில் எளியன்போலும், என உள் ளு வ ர் கொல்லோ - என்று எண்ணி விடுவார்களோ? மழைதவழும் பெருங்குன்றந்து = மழைமேகங்கள் வந்து படியும் பெரிய மலைகளில் வாழும். செயிர் உடைய அரவு எறிந்து = நஞ்சுடைய நாகங்களை நடுங்கப்பண்ணி. கடுஞ்சினத்த மிடல் தபுக்கும் - கொடிய சினம் உடையவாகிய அவற்றின் வலியை அழிக்கவல்ல பெருஞ்சினப் புவலேறு அனையை = பேரொலி எழுப்பும் பெரிய இடியேற்றினை ஒப்பாய். நின் படைவழி வாழ்நர் = உன்படையில் பணிபுரிவதால் உயிர்வாழும் உன் படை மறவர். தாங்குநர் = எதிர் நின்று போரிடும் பகைவர்களின். தடக்கையான தொடிக் கோடு துமிக்கும் - நீண்ட கையினை உடைய போர் யானையின் தொடியணிந்த கோடுகளை அழிக்கவல்ல. எஃகுடை வலத்தர் = படைக்கலங்களையே தேர்ந்து ஏந்தும் தறுகளுளராவர். மறங்கெழு போந்தை வெண்தோடு புனேத்து = தன்னை அணிவார் உள்ளத்தில் மறவுணர்வை மிகுவிக்கும் இயல்புடையதான் பனையின் வெள்ளிய ஒலையால் புனையப்பெற்று. நிறம் பெயர் கண்ணி= பகைவரின் குருதிக்கறை படிந்து தன் வெண்ணிறம் இழந்து செந்நிறம் பெற்ற தலமாலையின. பருந்து ஊறு அளப்ப = ஊன்துண்டம் எனப்பிறழக் கொண்ட பருந்து, அதை

27

27