பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trial

112

type



5) வேறுபடும் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து இருப்பய்வை முடிவா கச் சமன் செய்தல்.

trial balance, uses of – இருப்பாய்வின் பயன்கள்:

1) அனைத்துக் கணக்குகள் காட்டும் இருப்புகளைத் தொகுத்து அறிக்ககையாகத் தயார் செய்யப்படுவது.

2) பேரேட்டில் பதியப்படும் கணக்குகள் சரிதன்மை இத னால் அறுதியிடப்படும்.

3) பற்றிருப்புகளின் கூட்டுத் தொகையும் வரவிருப்புகளின் கூட்டுத்தொகையும் சமமாய் இருக்குமாயின், இருப்பாய்வு உடன்படுவதாகும். இது கணக்குகள் சரிவர எடுத் தெழுதப்பட்டுள்ளன என்ப தற்கு ஓரளவு சான்றாக இருப்பது.

4) மொத்த ஆதாயத்தை உயர்த் தும் வணிகக் கணக்கையும் நிகர ஆதாயத்தை வெளிப் படுத்தும் இலாப-நட்டக் கணக் கையும், நிதிநிலையைப் படம் பிடித்துக் காட்டும் இருப்பு நிலைக் குறிப்பையும் உரு வாக்க, இது ஓர் அடிப்படை.

trust - அறக்கட்டளை: தொண்டு முதலிய பெருஞ் செயல்களுக் காக ஒருவர் செய்யும் சொத்து ஏற்பாடு. இதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து அதில் கூறப்பட்ட செலவுகள் செய்யப் படும். எ-டு. பச்சையப்பன் அறக்கட்டளை.

trustdeed - அறக்கட்டளை ஆவ ணம்: அறக்கட்டளை விவரங்கள் யாவுங் கொண்ட பத்திரம்.

trustee - அறங்காவலர்: ஒரு சொத்திற்குச் சட்ட உரிமை உடையவர்.

trustfund - அறக்கட்டளை நிதி: அறக்கட்டளை உருவாக்கும் பணமும் சொத்தும்.

turn - திரும்பு விலை: ஒரு சந் தையாளர் ஒரு பிணையத்தை வாங்கும் விலைக்கும் அதை அவர் விற்கும் விலைக்குமுள்ள வேறுபாடு பா. bidprice, offer price.

turnover - விற்றுமுதல்: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நிறு வனத்தின் மொத்த விற்பனை. பொதுவாக, இது ஆண்டுக்கு ஒருதடவையே கணக்கிடப் படும்.

turnover tax - விற்றுமுதல் வரி: ஒரு தொழிலில் நடைபெறும் விற்பனைக்கு விதிக்கப்படும் வரி.

types of shares – பங்குகள் வகை: பொது வரையறை நிறு மங்கள் வெளியிடும் பங்குகள். இருவகை.

1) நேர்மைப்பங்குகள்: பொது நிலைப்பங்குகள். நிறுமம்