பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

trial

111

triai



யிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. பேரேட்டுக் கணக்கையும் இறு திக் கணக்குகளையும் இணைக் கும் பாலம்.

trial balance, features of — இருப்பாய்வின் இயல்புகள்: 1) இதில் வரவிருப்புகள் ஒரு பக்கத்திலும் பற்றிருப்புகள் ஒரு பக்கத்திலும் இருக்கும். 2) ஒவ்வொரு கணக்கின் இறுதி அறிக்கை இதற்குக் கொண்டு வரப்படும். 3) எப்பொழுது கணக்குகள் இருப்பு கட்டப்படுகின்றனவோ அப்பொழுது இருப்புப் பட்டி யலைத் தயாரிக்க இயலும். 4) இது ஓர் அறிக்கையாதலால், பற்றுப் பகுதி, வரவுப் பகுதி என்று பிரிக்கப்படுவதில்லை.

trial balance, errors of — இருப்பாய்வுப் பிழைகள்: இவை இருவகை. I) வெளிப்படுத்தும் பிழைகள்

1) பகுதி விடுவிழை 2) கணக் கில் தவறான பகுதியில் எடுத்து எழுதுதல். 3) தவறான தொகையை எடுத்து எழுதுதல் 4) ஒரு கணக்கில் இருமுறை எடுத்து எழுதுதல் 5) தவறான கூட்டுப்புள்ளி 6) தவறாக இருப் புக் கட்டல் 7) மொத்தங்களைத் தவறாகத் துக்கி எழுதுதல்.

II) வெளிப்படுத்தாப் பிழைகள்

1) முழு விடுபிழை 2) தவறான துணை ஏட்டில் பதிதல் 3) தக்க துணை ஏட்டில் தவறாகப் பதிதல் 4) தவறாகக் கணக்கு எழுதுதல் 5) விதிப்பிழைகள் 6) ஈடுசெய் பிழைகள்.

trialbalance errors, realizing of - இருப்பாய்வுப் பிழைகளை உணர்தல: பின்வரும் முறைகளில் உணர லாம்.

1) இருப்பாய்வின் கூட்டுத் தொகைகளை மீண்டும் சரி பார்த்து, அவற்றின் வேறுபடுந் தொகையை அறிதல்.

2) இருப்பாய்வில் இடம் பெற் றுள்ள கணக்குகளில் ஏதேனும் ஒன்று, இவ்வேறு படுந்தொகை யில் சரிபாதியைக் கொண்டுள் ளதா என்று பார்த்தல். அவ்வா றாயின், அது சரியான பத்தி யில் எழுதப்பட்டுள்ளதா என்பதைக் காணல்

3) கடனாளிப் பட்டியலையும் கடன் ஈந்தோர் பட்டியலையும் மீண்டும் கூட்டிச் சரிபார்த்தல்

4) வங்கி இருப்புகள் இருப்பாய் வில் இடம் பெற்றுள்ளனவா என்று பார்த்தல்.