பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

bid

17

bills



அடங்கும். நிறும உந்துவண்டி, இலவச உண்டி. நலவாழ்வுக் காப்புறுதி, எளிய கடன்கள் முதலியவை இவ்வசதிகள்

bid - கேள்வி: பேரம் வாங்குபவர் பேரத்தை முடிக்க விரும்பும் விலை. இது நிபந்தனைக் கேள்வி, நிபந்தனையற்ற கேள்வி என இருவகை

bid price – கேள்வி விலை: பேரவிலை. ஒரு நிறுவனம் தன் பங்குகளைச் சந்தையில் விற்கும் பொழுது கூறும் இரு விலைகளில் குறைவானது

bill - உண்டியல்:, பட்டியல்,சீட்டு

bill book – உண்டியல்:, ஏடு) பட்டியல் புத்தகம்

bill broker – உண்டியல் தரகர்: கழிவுத் தொகைத்தரகர். வணிகர்களிடமிருந்து மாற்றுண்டியலை வாங்கி வங்கிகளுக்கு விற்கும் தரகர்

bill of entry — சுங்க அலுவலர் பட்டியல்: கப்பல் உரிமையாளர் சுங்கத்துறைக்காகத் தயாரிக்கும் சரக்குகளின் அனுப்பீடு. இதன் மதிப்பும் இயல்பும் விரிவாகக் குறிக்கப்பட்டிருக்கும்

bill of exchange – மாற்றுண்டியல்: மாற்றுச்சீட்டு. எழுத்து வடிவத்திலுள்ள நிபந்தனை இல்லாத கட்டளை. உண்டியல் வரைபவரால் உண்டியல்,பெறுபவருக்கு அனுப்பப்படுவது. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பட்ட பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று அதில் எழுதப்பட்டிருக்கும்

bill of lading - ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு: கப்பல் வரவுச் சீட்டு. கடல் வழி கொண்டு செல்லப்படுவதற்காக அனுப்பவரின் சரக்குகளுக்குக் கொடுக்கப்படும் ஆவணம்

bill of sale – விற்பனைச் சீட்டு: ஒருவர்தம் சரக்குகளின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் ஆவணம்: இது நிபந்தனை விற்பனைச் சீட்டு, முழு விற்பனைச்சீட்டு என இருவகை

bills payable - செலுத்து உண்டியல்கள்: முதிர்ச்சியடையும் பொழுது, செலுத்தப்பட வேண்டியவை. இவை நடப்புப் பொறுப்புகளில் இருக்கும்

bilis payable book - செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு: பிறர் நம் மீது மாற்று சீட்டு வரைய நாம் அதை ஏற்கும் பொழுதும் பிறருக்கு நாம் கடன் உறுதிச் சீட்டு, உண்டியல் ஆகியவற்றை எழுதித் தரும் பொழுதும் அவற்றை இப்புத்தகத்தில் பதிய வேண்டும்

bills receivable - வரவு உண்டியல்கள்: இவை நடப்பு இருப்புகளில் இருக்கும்