உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

com

32

con


எ-டு. விற்பனைக் கணக்கு ரூ 500 குறைத்துக் கூட்டப்படுதல்.

compensation fund - ஈடுசெய் நிதியம்: ஒரு நிறுவனத்தில் இழப்பு ஏற்படும் பொழுது அதைச் சரிக்கட்டுவதற்காக உள்ள நிதியம்.

composite costing- தொகுப்பு ஆக்கச் செலவு.

composite depreciation -தொகுப்புத் தேய்மானம்.

compulsory deposit scheme - கட்டாயச் சேமிப்புத் திட்டம்: அரசின் சேமிப்புத் திட்டம்.

compulsory liquidatlon - கட்டாயக் கலைப்பு: நீதிமன்றம் மூலம் ஒரு நிறுமம் கலைக்கப்படுதல். இதற்கு நீதிமன்றத்திற்கும் பதிவாளருக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

computer - கணிப்பொறி: தகவல்களை விரைவாக வேண்டியவாறு முறையாக்கித் தரும் மின்னணுக் கருவியமைப்பு. தொழில் நுணுக்க முன்னேற்றம் காரணமாக, இன்று கணிப்பொறி இல்லாத அலுவலங்கள் தொழிலகங்கள் இல்லை எனலாம். கணிப்பொறிவயமாக்கல் ஓர் இன்றியமையாத் தேவை.

condition - நிபந்தனை : ஓர் ஒப்பந்தத்தின் பெரும உறுப்பு. நிறைவேறாவிட்டால் ஒப்பந்த மீறலாக அமைவது. மதிப் பற்றது.

conditional endorsement - நிபந்தனை மேலொப்பம்; கட்டுப்பாட்டிற்குட்பட்ட புறக்குறிப்பு.

consent - இசைவு: ஒப்புதல்.

consideration - நம்புறுதி: ஓர் ஒப்பந்தத்தில் வாங்குவதற்குரிய விலை குறித்து இருவரிடமும் உறுதி மொழிபெறுதல் 2) விலை ஈடு: பிணையங்கள் விற்க அல்லது வாங்குவதற்குரிய ஒப்பந்தத்தின் பண மதிப்பு. |

consignee - பெறுநர்: அனுப்பீட்டைப் பெறுபவர், அனுப்பீடு என்பது சரக்குகளைக் குறிப்பது.

consignment - அனுப்பீடு: சரக்குகள் ஒருவருக்கு அனுப்பப்படுதல், விற்பனையைப் பெருக்கும் வழிகளில் ஒன்று.

consignment account - அனுப்பீட்டுக் கணக்கு: சரக்கு ஆக்கச் செலவு. ஆன செலவு. முகவர் கழிவு, விற்பனை ஆதாயம் ஆகிய விவரங்கள் கொண்டது.

consignment, Inward - உள் அனுப்பீடு.

consignment note - அனுப்பீட்டுக் குறிப்பு: சரக்குகள் அனுப்புவதைத் தொடரும்