பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொலிவு 121 கொள்வேன்; தெரியாமல் என்னைக் கலியாணம் செய்து கொண்டார். அவருடைய மனைவியாக இருக்கும் வகையில், என் நடை ரொடி பாவனை இல்லை; என்னால் மாறவும் சுலபத்திலே முடியவில்லை அவர் தன்னைத்தானே ஏமாற் றிக் கொண்டார், பாவம், ஊர்மிளா உல்லாசமாகப் பேசு கிறாள். அதிலே அவருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. அதை யாவது அவர் பெறட்டும் என்று நினைத்துக் கொள்வாள்- கோபம்கூட மறையும். அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று? மாமி அதைத் துவக்கி வைத்தாள். செல்லி! ஒரு படித்த புருஷன், நாலு பேருடன் மதிப்பாகப் பழகி வருகிறவன், நாகரிகமானவன், அவனோட மனசு சந்தோஷப்படுகிற மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற அறிவு இருக்க வேணாமாம்மா! கழுத்திலே தாலியைக் கட்டிவிட்ட பிறகு, மனைவியுடன் புருஷன் ஆசையா இருந்துதானே தீரணும்னு எண்ணிக் கொண்டா போதுமா? அவனுக்கு மனம் குளிரும்படியா, நாகரிகமாக உடுத்திக் கொண்டு, நல்ல இன்பமாகப் பேசிக்கொண்டு, பொழுது போக்காக இருந்தால்தானே, அவன் உன்னை எப் போதும் அன்பாக நடத்துவான். எண்ணெய் வடிந்து நெற்றி யிலே வழியுது - அதைக்கூடத் தெரிந்து கொள்ளாமலிருக்கறே! அதே கோலத்திலே பல பெண்கள் உன்னைப் பார்க்கிறாங்க! பின்னாலே போயி எவ்வளவு கேலியாகப் பேசறாங்க தெரி யுமா? செச்சே! இப்படியா இடிச்சுவைச்ச புளியாட்டம் இருக் கிறது என்று புத்தி சொல்லி வந்தார்கள்; புதிய கோலம் பெறுவதற்கான வழிகளை, வேலைக்காரி மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். செல்லியும், நாகரிகக் கோலத்தை - உதட் டுச் சாயம் உட்பட மேற்கொள்ள ஆரம்பித்தாள்.சகிக்க முடி யாத கோரம் அவளிடம் குடிபுக வந்தது. கூந்தலை அள்ளிச் செருகிவிட்டு, சிறுமலர்ச் செண்டு வைத்திருந்தபோது இருந்த எழில், முன்பக்கம் கொம்பு போலக் கூந்தலைச் சுருட்டிவிட்டு, பின்பக்கம் இரண்டு சாட்டைகளைத் தொங்கவிட்டு, தலையிலே ஒரு பூக்கூடை யைச் சுமந்துகொண்டு செல்லி காட்சி தந்தபோது வடி வேலன், வெட்கப்படும் வடிவம் காட்டிற்று!