பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 புதிய ஊர்மிளாவை இதே கோலத்தில் பார்த்தவர்கள் கிளியோபாட்ரா என்பார்கள்! செல்லிக்கு அதே அலங்காரம், ஆபாசமாக இருந்தது. இவ்விதமே, நாகரிக நங்கையாக வேண்டும் என்பதற்காக, செல்லி எடுத்துக் கொண்ட ஒவ் வொரு முயற்சியும் அவளுடைய இயற்கை எழிலைப் பாழாக்கி விட்டது. செல்லிக்கும் வடிவேலனுக்கும் இடையிலே இருந்த தொலைவு அதிகரித்தது; ஊர்மிளாதான் வடிவேலனுச்கு. ஓவியக்கலைக்கே ஆதாரமானாள். புன்னகையுடன் ஊர்மிளா புல்லை வாயில் தடவியபடி படுத்த நிலையில் ஊர்மிளா! பந்தாடும் ஊர்மிளா! என்று இப்படியே ஓவியங்கள் கூடத்தை அலங்கரித்தன. செல்லியின் ஓவியத்தை அகற்றிவிடவில்லை; அந்த இடம் ஊர்மிளாவின் ஓவியக் காட்சிக் கூடமாகவே மாறிவிட்டது. கோபம், எழும்பி எழும்பித் தானாக அடங்கிடும் ஏமாற்றம், வெட்கம், துக்கம் எல்லாம்கூடிச் செல்லியின் மீது படை எடுத்தன. 'இளமை' ஓரளவுக்குக் கவசமாக நின்று தடுத்தது. என்றாலும் நீண்ட நாளைக்கு இந்தக் கவசம் பயன்படாது என்பது புரியும் நிலை வந்தது. செல்லியின் முகம், சோக பிம்பமாகிவிட்டது. ஏனம்மா! உலகத்தையே பறிகொடுத்தவ போல உம் முனு இருக்காளே, செல்லி! என்னவாம்? உடம்புக்கு ஏதா வது தொல்லையா? சொல்லித் தொலைச்சாத்தானே, ஏதா வது செய்யலாம்..." "" 'அவளுக்கு உடம்புக்கு என்னடா? வேளா வேளைக்குச் சாப்பிடறா, விடியிற வரையிலே தூங்கறா, விசனம் என்ன இருக்கு, உடம்பு கெட? சிலதுகளோட முகம் அப்படி. பதி னெட்டிலே பால் வடியறது போல இருக்கும். இருவதிலே அழுதுவடியும். அதுக்கு என்ன மருந்து இருக்கு டாக்டரிடம்" ஊர் ஞாபகம் வந்திருக்கோ, என்னமோ? போகிறதா இருந்தா, அனுப்பி வையேன்."