பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வெண்ணிலவில்

சரி, அதோ, நமது கதாநாயகர் வெகுதுனாம் போய் விட்டார். அவரைப் பின் தொடர்ந்து பார்க்க லாம். பூந்தமல்லிச் சாலைக்கும், புரசைவாக்கத் துக்கும் மத்தியில் உள்ள ஒரு விசாலமான பங்களா வுக்குச் சற்று தாரத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. பூநீ வேதநாயகம் அந்த மரத்தடியில் போய் கின்று கொண்டார். r ஆறு வருஷம் சிறை வாழ்க்கை காரணமாக அவர் மைேபலம் குறையவில்லை என்ருலும், தேக பலம் வெகுவாகக் குறைத்து விட்டது. அவருடைய

உடையெல்லாம் பாழ்பட்ட தோற்றம் அளித்தன.

ஆலமரத்தடியில் கின்ற வண்ணம் வேத காயம் அருகாமையில் தெரிந்த தம்முடைய பங்களாவை ஆவல் கிறைக்க கண்களுடன் நோக்கினர். ஆம் ; அந்த பங்களா அவருடையது தான். பங்களாவின் தோற்றம் அவருக்குப் ப்ரம வேதனையை உண்டாக் கிற்று. -

தம்முடைய கேவலமான ஆடைகளையும், அந்த பங்களாவின் கம்பீரமான தோற்றத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டார். பங்களாவின் மேல் மாடியில் இருக்க முகப்பு அறையிலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்த அறைக்குள்ளே இருந்த கட்டிலின் மீது வேதநாய கத்தின் மனைவி சோகத்துடன் படுத்திருந்தாள். அக்க திக்கற்ற ஸ்திரியின் கண்களிலிருந்து கண் னிர் பெருகிக் கொண்டிருந்தது.