பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடந்தது . - - 35

வேதநாயகம் ஒரு கணம் தமது மண்டையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண் டார். மனைவி, கன்னே இந்தக் கோலத்தில் இந்த சமயத்தில் இங்கே பார்க்க நேர்ந்தால் தன்னைப் பற்றி என்ன கினைப்பாள்? சிறைக்குப் போய் வந்த வன் என்பதற்காகக் கேவலமாக கினைப்பாளோ ?

வேதநாயகத்தின் கெஞ்சிலும் வயிற்றிலும் சங்கடமும் பசியும் சேர்ந்து குழப்பிக் கொண்டி ருந்தன. - r -

காலையில் விடுதலை பெற்றவர் பகல் ஒரு மணி சுமாருக்கு ஏதோ கொஞ்சம் ஆகாரம் சாப்பிட் டார். அப்புறம் இதுவரை ஒன்றும் சாப்பிடவே யில்லை.

அடுத்தபடியாக, வேத நாயகத்துக்குத் தம் முடைய மகள் ரஞ்சனியின் ஞாபகம் வந்தது. குழந்தை ரஞ்சனிக்கு * , இப்போது இருபது வயது இருக்கலாம். கான் சிறை சென்ற போது ரஞ்சனி விவரம் தெரியாத சிறுமியா யிருந்தாள். இப்போது வயது வந்த யுவதியா யிருப்பாள். ாஞ்சனி தன்னைப் பற்றித் தாயாரிடம் விசாரித் திருப்பாள். தாயார் என்ன பதில் சொன்னளோ?

இவ்வாறெல்லாம மாறி மாறி கினைத்து.வெட் கப்பட்டார் வேதநாயகம். பிறகு மனதைத் தேற் றிக் கொண்டார். தம் சொந்த வீட்டுக்குள் நுழை வதற்கு ஏன் இத்தனே லஞ்ஜைப்பட வேண்டும்?.