பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - வின்

ஏளனமாகப் பேசிக் கொள்கிருரர்கள் என்று மட்டும் தெரிந்து கொண்டாள். -

எப்படியாவது அவளுக்கு எதிர் வீட்டுக்குப் போய் அந்த மாமியுடன் பேசிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டுக்குப் போள்ை. வாசல் கதவருகில் போப் கின்றுகொண்டு கதவைத் தட்டலாமா என்று யோசித்தாள். மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது. இரண்டு தடவை மெதுவாகக் கட்டி இன். உள்ளே யிருந்து அவள் வந்தாள். வந்தவள் முத்துப் போன்ற தன் பற்களைக் காட்டிச் சிரித்து விட்டு குழந்தை பத்மாவின் கன்னத்தைக் கிள்ளி, உள்ளே வா ! என்று அன்போடு அழைத்தாள். பத்மாவுக்கு லஜ்ஜை வந்து முகத்தைக் கவ்விக் கொண்டது. அந்த மாமியிடம் என்ன பேசுவ, தென்று தெரியவில்லை. திரும்பி ஓட்டமாய் ஒடியே வந்து விட்டாள். அப்புறம் இரண்டு மூன்று தடவை. அடுத்தடுத்துப் போள்ை. அவளும் பத்மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பார்த்தாள்.பத்மர் விட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது குழந்தை யிடம் ஏதாவது திண்பண்டம் கொடுத்தனுப்புவாள். அதை யெல்லாம் பத்மா பாதி வழியிலேயே தீர்த்து விட்டு வந்து விடுவாள். வீட்டுக்கு எடுத்து வந்தால் அம்மா கோபிப்பாள் என்ற பயம்தான்

பத்மாவுக்கு ஒரு நாள் அந்த மாமி யைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலிருந் தது. அந்தக் கேள்வியை கேட்டே விட்டாள்.