பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதந்தி - ' 6 5

மாமி ! உங்க அப்பா, அம்மா எங்கே? வர மாட்டாளா?' - -

' வருவாளே !? . எப்ப வருவா ?”

“ இன்றைக்குக் கூட வரலாம். யாரிடமும் அதிகம் பேசாத அந்த யுவதிக்கு பத்மாவிடம் பேசு வதில் மட்டும் தனிப்பட்ட உற்சாகம் இருந்தது.

அந்த அதிசய வீடு ரயில்வே லயனுக்குச் சமீ பம் இருந்ததால் ஒவ்வொரு நாளும் போட் மெயில். வரும்போது அதை உற்றுக் கவனிப்பாள் அந்த யுவதி. ரயிலில் யாரைப் பார்க்கிறீர்கள் மாமி ?” என்று பத்மா கேட்டால் என் அப்பா அம்மா வருவாளா என்றுதான் பார்க்கிறேன் என்று பதில் கூறுவாள்.

அம்மாவுக்குத் தெரியாமல் பத்மா எதிர் வீட் டுக்குப் போய் வருவதை அவளுடைய சகோதரிகள் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். பத்மாவின் மூலம் எதிர் வீட்டு விஷயங்களே கிரகிப்பதற்கு அது ஒத்தாசையா யிருந்ததால் அவர்கள் இதை அம்மாவிடம் சொல்லவில்லை. ஆறு மாத காலமாகி யும், அந்த எதிர் வீட்டு யுவதியை அவளுடைய காயாரோ தகப்பனரோ யாருமே வந்து பார்க்கி வில்லை. இதல்ை அந்த யுவதியின் பேரிலிருந்த அவப் பெயர் ஊர்ஜிதமாகி, மேற்படி வதந் தி காற்று விர்க்காகப் பரவ ஆரம்பித்தது.