பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது

இயந்தி பெயருக்கேற்ற அழகு வாய்க்கவள். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். எனவே, ஆடம்பர மான ஆடை ஆபரணங்கள், நகை கட்டு எதுவும் அவளுக்குக் கிடையாது. எனக்கென்னத்திற்கு நகை ?' என்பதைப் போல் எப்போதும் அவள் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டிருக்கும்!

அவளுடைய தாயார் இறந்து மூன்று வருஷங் கள் ஆகின்றன. இப்போது அவளுக்கு lெயது ஒன்பது. தகப்பர்ை வேலைக்குப் போய் விட்டால் அவளுக்குத் துணேயாக வீட்டில் யாருமே.கிடையாது.

அப்பா திரும்பி வரும் வரை அவள் கன்னங் கனி' யாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு வருஷம் சென்றதும் அப்பா மறு மணம் செய்து கொண்டார். சூடாமணி என்ற பதினெட்டு வயது இளம் பெண் ஒருத்தி அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வசீகரமான தோற்றம். எப்போதும்.

கிரித்த முகம் ; குளுமையான பேச்சு. ‘. . . .

சூடாமணி வந்த பிறகு ஜயந்தியின் வாழககை யில் புது உற்சாகம் பிறந்தது. - -

அவர்களிருவரும் ஒருவரை யொருவர் அன்பு டன் நேசிக்கத் தொடங்கினர்கள். அவர்களுக்குள்