பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

137


“எதற்கு?.”

கண்களை அகற்றி, “உங்களுக்குத் தெரியாது?” என்று கேட்கிறாள்.

“அரண்மனைக்குக் கொண்டு போவாங்க” என்று சொல்லி, வெட்டுவது போலும் குத்துவது போலும் சைகை செய்கிறாள்.

“எதற்கு?”

“எதற்கு? யானை, ஆடு, மாடு, எல்லாம் புடிச்சிட்டுப் போறாப்பல எங்களையும் கொண்டு போவாங்க. இந்த எல்லையிலேந்து ஒருத்தர் கூடப் போனதில்ல. நச்சுக்கொட்டை காட்டுறேன் பார்.” என்று அடர்ந்த புல் பகுதியில் முழங்கால் மறையும் பசுமைக்குள் அடி வைத்து ஒரு வேர், கொட்டை இரண்டும் கொண்டு வருகிறாள். இதை அரைத்து, ஒரு மூங்கில் குடுவையில் வைத்திருப்போம். அம்பில் தோய்த்து விடுவோம். எங்கள் பிள்ளைகளில் சின்னஞ்சிறிசு கூடக் கவண்கல் குறி தவறாமல் விடும்.

அப்போது அவளுக்கு முதல் நாளைய வரவேற்பில் ஒரு சிறுவன் கையில் அதைக் கண்ட நினைவு வருகிறது.

“இப்போதும் அடிப்பார்களா உலூ?.”

“முன்னே நடந்திச்சி. மிதுனபுரிலேந்தும் வேதபுரிலேந்தும் யாரும் வரமாட்டார்கள். இந்தப் பட்டுக்கூடுகள் அறுந்து பறந்து கிடக்கும். பூச்சிகள் பறக்கும். யாரேனும் திருட்டுத்தனமாக அறுந்துதொங்கும் இழைகளை எடுக்க வரும்போது அம்பு பாயும்.”

“உங்களுக்கு இப்போது எப்படித் தைரியம் வந்தது?”

“சத்தியமுனிவர். ஒருநாள் அவரையே அடித்துவிட்டார்கள். அப்படியும் அவர் திரும்பத் திரும்ப வந்தார். அப்படியெல்லாம் யாரையும் யாரும் பிடிச்சிட்டுப் போக விடமாட்டோம்னு சொன்னாங்க. இப்ப அந்தக் காடு, இந்தக் காடு எல்லாம் ஒண்ணாப்போச்சி. சாலியர் வந்து இதெல்லாம் கொண்டு