பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வனதேவியின் மைந்தர்கள்

ஆட்டபாட்டமும் அடங்குகிறது. கண்களில் நீர்துளிக்கும் உருக்கம் அது. யாரையோ எதற்கோ இறைஞ்சும் பாவனை. பெரியவர்களிடம் அடங்கி இருக்கும் சிறு பிள்ளைகளில் கண்பார்வையற்ற ஒரு பிள்ளை அமர்ந்திருக்கிறது. முடியே இல்லை. வழுக்கை கண்பார்வை இல்லை. அரிவியின் பிள்ளையைப் பாரு! அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது!’

பூமரத்தின் பக்கம் உட்கார்ந்து குழலுதும் சம்பூகன், அந்தப் பிள்ளையை அழைத்து அருகில் அமர்த்திக்கொள்கிறான்.

இப்போது அந்த இசை கேட்டு அந்தச் சிறு உடல் அசைகிறது. கைகள் பரபரக்கின்றன.

“இந்தச் சிறுவனுக்கு எப்படி இப்படிப் பாட வருது?”

‘நந்தசுவாமி சொல்லிக் கொடுத்தாங்க சாமி அருள் இது. இப்படி ஒரு குழல் ஊதல் யாருமே ஊதி கேட்டதில்லே.” என்று முதியவன் ஒருவன் சொல்கிறான்.

ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு பரவசம் பொழுது சாயத் தொடங்கும்போது, திமுதிமுவென்று யார் யாரோ ஒடி வரும் ஒசை கேட்கிறது.

சத்தியமுனி வருகிறாரா?. அந்தப்பக்கத்துப் பிள்ளைகள் அல்லவோ ஓடி வருகிறார்கள்!

இரைக்க இரைக்க ஓடிவரும் இளைஞன் “அக்கரையில், ராசா படை கொண்டிட்டு வராங்க அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க!” என்கிறான்.

கொல்லென்று அமைதி படிகிறது.

அவள் சில்லிட்டுப் போனாற்போல் குலுங்குகிறாள்.

“அட துப்புக்கெட்ட பயலே? யாரடா ராசா படை இங்கே கொண்டுவரது? நந்தசாமி இல்ல?” என்று பெரியம்மை கேட்கிறாள்.

“நந்தசாமி அக்கரையில் இருக்காங்க.ஆனா, யானை குதிரை, தேரு, படை குடை எல்லாம் போகுது. நாம எதுக்கும் கருத்தா