பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

155



          வனதேவி யாழிசைக்கிறாள்.
          வானும் மண்ணும் எழில்துலங்குதாம்.”

நந்தமுனி கையில் ஒற்றைநாண் யாழுடன் எழுந்தாடுகிறார். பிள்ளைகள் கைகொட்டி ஆடிப்பர்டுகின்றனர்.


          ‘வனதேவி எங்கள் வனதேவி.
          அவள் சுவாசம் - எங்கள் பசுமை
          அவள் மகிமை - எங்கள் மகிமை.
          ஓம் ஓம் ஒமென்று புகழ்ந்தாடுவோம்.
          ஆம் ஆம் ஆமென்று குதித்தாடுவோம்.
          துன்பமில்லை - துயரமில்லை.
          அன்பு செய்வோம் - இன்பமுண்டு.
          வனதேவி - எங்கள் வனதேவி.”

கன்றும் பசுவும் முற்றத்தில் அமைதியாக இக்காட்சியைக் காண்கின்றன. பூமகள் துயரங்கள் விலகிவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறாள். பிள்ளைகள், கூடியிருந்த பெண்கள், எல்லோரும் உணவுண்டு, இளைப்பாறும் நேரம் அது.

புதர்களுக்குப்பின் சலசலப்பு. யார் யாரோ பேசுங்குரல்கள் செவியில் விழுகின்றன.

லூ வாய் மூடாமல் கண் மூடி உறங்குபவள், திடுக்கென்று எழுந்திருக்கிறாள். வாருணி எழுந்து ஒடுகிறாள்.

‘சாமி, யார் யாரோ வராங்க! யாரோ அந்தப் பக்கமிருந்து வாராங்க!”

யாரு?

சம்பூகன் முற்றம் தாண்டிச் செல்கிறான். பட்டுத்திரித்துக் கொண்டிருக்கும் நந்தசுவாமியும், பட்டிலவமரத்தடியில் பஞ்சு திரிக்கும் சத்தியமுனியும் என்ன கலவரமென்றறிய விரைந்து முற்றத்துக்கு வருகிறார்கள். பூமகள் உணவுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய முனைந்திருக்கிறாள்.