பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

வனதேவியின் மைந்தர்கள்

தந்தைக்குப் பட்டத்தரசி இருக்கிறார்களே? ஊர்மிளியின் தாயார்? அவர் எதற்கு பொற்பிரதிமை செய்து வைக்க வேண்டும்?.”

அன்னை பேசவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புற்றரைக்கு நகர்ந்து போகிறாள்.

மாதுலன் குழலூதிக் கொண்டு வருகிறான். அஜயன், விஜயன், நீலன், காந்தன் எல்லோரும் வருகிறார்கள். அரிந்த புல் கட்டைக் கூரை பின்னுவதற்கு வசதியான இடத்தில் போடுகிறார்கள்.

நாம் நீராடி வருவோம். அம்மா, இன்றைக்கு நாங்கள், எல்லோரும் இங்கு உணவு கொள்ளவில்லை. சாந்தன் வீட்டுக்குப் போகிறோம்.” உடலைத் தட்டிக் கொண்டு, ஆடிப்பாடிக் கொண்டு குளக்கரைக்குச் செல்கிறார்கள்.

பூமகளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மலைகள் கரைவது போலும், ஆறுகள் பொங்குவதுபோலும் கடல் ஊரை அழிப்பது போலும் மனசுக்குள் விவரிக்க இயலாத அச்சம் கிளர்ந்து அவளை ஆட்கொள்ளுகிறது.

“கண்ணம்மா? பிள்ளைகள் எங்கே போகிறார்கள்?”

“சாந்தன் கூட்டிப் போகிறான். யாவாலி ஆசிரமத்துப்பக்கம் போகிறார்கள். மானோ, மீனோ எதுவோ சமைத்து இருப்பார்கள். சத்தியரும் நந்த முனியும் அங்கே தானே இருப்பார்கள்? அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?”

“....அடியே, கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில், இளவரசுப்பட்டம் கட்டி நாடாள வேண்டிய பிள்ளைகளை இங்கே வேடக் கூட்டத்துடன் வைத்திருக்கிறோம் என்று மன வருத்தம் இருக்கிறதா? சொல்’

இறுகிப்போன உணர்வுகளை பெரியம்மை துண்டில் கொக்கிபோட்டு நெம்புவது போல் வேதனை தோன்றுகிறது.

ஒருகால் மந்திரக் குதிரை இங்கு வந்துவிட்டால்? வராது என்று என்ன நிச்சயம்? இந்தப்பிள்ளைகளுக்குத் தந்தையைப் பற்றி