பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

217

வளர்த்தான். சம்பூகன். அவளுக்கு அடிவயிற்றில் இருந்து சோகம் கிளர்ந்து வருகிறது. “அம்மா. என்று துயம் வெடி க்கக் கதறுகிறாள். ஆனால் என்ன சங்கடம்? குரலே வரவில்லையே?.

ஓ. இதுதான் மரணத்தின் பிடியோ’ என்னை விட்டுவிடு. நானே உன் மடியில் அமைதி அடைகிறேன். தாயே..

“கண்ணம்மா. கண்ணம்மா!.”

அன்னையின் கை அவள் முகத்தில் படிகிறது. “மகளே, கெட்ட கனவு கண்டாயா?”

“புரண்டு புரண்டு துடித்தாயே! நீ எதையோ நினைத்து அச்சம் கொண்டிருக்கிறாய். நந்தசுவாமியும், சத்திய முனிவரும் இருக்கையில் ஒரு துன்பமும் வராது. கிழக்கு வெளுத்துவிட்டது. எழுந்திரு குழந்தாய்?.”

அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பிள்ளைகள் எழுந்து காலைக்கடன் கழிக்கச் சென்றுவிட்டனர். புல்லி முற்றம் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள்.

இவளால் ஓநாய் வாயில் நினம் கவ்விச் சென்ற காட்சியை மறக்க முடியவில்லை.

“தாயே எனக்கு நந்தமுனிவரின் அருகே சென்று ஆசிபெறத் தோன்றுகிறது.”

“போகலாம். புல்லியையோ வருணியையோ அழைத்துச் செல் அவனே வருவான், மகளே என்று அழைத்துக் கொண்டு. நீராடி, கிழக்கே உதித்தவனைத் தொழுது வருமுன் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். வருணியோ, புல்லியோ உணவு பக்குவம் செய்யட்டும். நீ அமைதியாக இரு குழந்தாய்.”

அவள் எழுந்து நீர்க்கரைக்குச் செல்கிறாள். நீராடி வானவனின் கொடையை எண்ணி நீரை முகர்ந்து ஊற்றும்போது, அவள் முகத்தில் அவன் கதிர்கள் விழுந்து ஆசி கூறுகின்றன. தடாகத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறிக்க அவளுக்கு மனமில்லை. “வானவனுக்கு நீங்களே காணிக்கை! மகிழுங்கள்!