பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

225

அவளுக்கு வணக்கம் சொல்கிறான். அந்தச் சீப்பு மிக அழகாக இருக்கிறது. மேலே கைப்பிடி ஒரு பூங்கொடிபோல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சீப்பு.

‘ஓ, கைத்திறமை இங்கே எப்படி மலர்ந்திருக்கிறது!...”

அவள் வியந்து நிற்கையிலே அவளை பாயில் உட்காரச் செய்கிறார்கள் அந்தப் பெண்கள் கைவசமுள்ள புளிப்பிலந்தைக் கனிகளைக் கொண்டுவந்து உபசரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளை அவள் மடியில் கொண்டுவந்து வைக்கிறார்கள் மடிகொள்ளவில்லை, ஒரு குழந்தைக்கே குழந்தை அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. உள்ளமெல்லாம் பாவில் குளிர்ந்தாற்போல் மகிழ்கிறாள். இனிப்புப் பகுதிப் பழத்தைக் கையில் தொட்டு அதன் வாயில் வைக்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.

“வனதேவி, உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்... இவை இரண்டும் பெண்கள்...” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறாள். வந்த வேலையே நினைவில்லை. குதிரை இங்கே இருக்கிறது; மாயன் நச்சம்பு தயாரிக்கிறான். யார் சொல்லுக்கும் அவன் வளையவில்லை. இவள் மகிழ்ச்சிப் பாலைக் கருநிலா வந்து மூடிவிட்டது.

இந்த மக்கள் எளியவர்தாம். ஆனால் இறுகினால் அசைக்க இயலாத இயல்புடையவர்கள். இனம் புரியாத அச்சம் அவளைப் பிள்ளைகளைத் தேடிச் செல்லச் செய்கிறது. ஆற்றுக்கரைப் புற்றரையில் தான் இருப்பதாக அவள் தெரிவித்ததை இலக்காக்கிக் கொண்டு செல்கிறாள். வானவன் சுள்ளென்று சுடுவதாகத் தோன்றுகிறது. புற்றரையில் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசகுமாரனுக்கு ஒரு பாதுகாவலன் குடைபிடிக்கிறான். குஞ்சம் தொங்கும் பட்டுக்குடை... அவள் புதல்வர்களுக்கும் அந்த மரியாதை உரியதே.

பொங்கும் இதயத்துடன் அவள் அருகே செல்கிறாள். அரண்கட்டினாற் போல், தாழைப் புதர்கள் இருக்குமிடத்தில் அவள் நிற்கிறாள். அங்கிருந்து நான்கு முழத் தொலைவில்

வ. மை. - 15