68
வனதேவியின் மைந்தர்கள்
ஊட்டும்போது அவற்றின் கூச்சல் இன்ப வாரிதியாகச் செவிகளில் விழுகின்றன.
அந்தக் குஞ்சுகள். இறகு முளைக்காத குஞ்சுகளுக்கு வாயே உடலாக இருப்பது போல் தோன்றுகிறது.
இவள் பூம்பந்தலின் மூலையில் இந்த உணவூட்டும் காட்சியில் ஒன்றி இருக்கையில், அவந்திகா வருகிறாள்.
“தேவி, குலகுரு சதானந்தர் வந்திருக்கிறார்...”
பூமை கண்களைத் திருப்பவில்லை.
“ஸீமந்த முகூர்த்தம் குறித்துக் கேட்க வந்திருப்பதாகத் தெரிகிறது...”
அவள் முகத்தில் வெம்மை பரவுகிறது.
“அவந்திகா, ஆண் பறவை அடைக் காக்குமா?
அவந்திகாவின் பார்வை அவளை ஊடுருவுகிறது.
“தெரியவில்லையே தேவி, பெண்களே கருவைச் சுமக்கிறார்கள். பறவைகளிலும் பெண் பறவையின் உயிர்ச்சூட்டில் குஞ்சு வெளிவருமாக நினைக்கிறேன்.”
“மனிதர்களோடு பறவைகளை ஒப்பிட வேண்டாம். பறவைகளை மட்டும் கேட்டேன்.”
“தெரிகிறது. மனிதர், விலங்கு, பறவை எல்லா உயிர்களிலும் ஆண்-பெண் பிரிவுகள் பொதுவானவைதானே ?”
“ஊர்வன வெல்லாம் பூமிக்குள் முட்டை வைக்கின்றன. பூமித்தாய் அடைகாத்து உயிர்கொடுக்கிறாள்... இல்லை...?”
“தாங்கள் சொல்வது சரிதான் தேவி...”
அவளுக்கு அப்போது பெரியம்மா நினைவு வருகிறது. அவள் தளிர்நடை பழகுப் பருவத்தில் அவர் அவளைத் தோளில் ஏற்றிக் கொள்வார். மரம், செடி கொடிகள் எல்லாவற்றையும் காட்டிக் கதை சொல்வார். ஒரு கதை... பூமி