பக்கம்:வரதன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புதியவன் 21. மணி ஐந்தரையும் ஆகிவிட்டது. வரதனே வீடு செல்லும் வழியினை அப்போதும் கண்டறியவில்லை. கடந்து நடந்து அவன் கால்களும் நொந்தன. அச்சமும் துன்பமும் அவன் மனத்தில் அதிகரிக்கலாயின : கண்க ளில் நீர் ததும்பிற்று ; மார்பு பட-பட வென்று அடித் தது. ஆதலால் அவன், அத்தெருவின் ஒருபுறத்தே ன்ெறு விம்மி-விம்மி அழலாயினன். அப்போது, சுமார் இருபத்தைந்து வயதுள்ள ஓர் இளைஞன் அவன் அருகே வந்து கின்றன். அவன் மெலிந்த உடலினன் ; மாநிறம் வாய்ந்தவன் ; குழிந்த கண்ணினன் ; குறுகிய நெற்றியினன். அவன் முகம் சிறிது நீண்டிருந்தது. மீசை மிகுதியும் அடர்ந்தில்லை. எனினும் அவன் அதனை அடிக்கடி முறுக்கிவிடுவான். அவன் உதடுகள் சிறிது கறுத்தே காணப்பட்டன. அவன், தன் முன்புறத் தலைமயிரினைக் கத்திரித்துப் பக்க வடுவெடுத்து ஒழுங்குபெற வாரிவிட்டிருந்தான். பின் புறத்தே இருந்த மயிர் முடிச்சு, பல கொண்டை யூசி களுடன் விளங்கியது. அவன் அணிந்திருந்த ஆடை சுத்தமானதாகவும் மிக்க விலே யுள்ளதாகவும் காணப்பட் It • التى ـا அவன் அருகே வந்ததும் வரதனை உற்று நோக்கி ன்ை. வரதன் அந்த இளைஞனைப் பார்த்து மிரள-மிரள விழித்தான். பின்னர் அவன் புன்முறுவல் செய்து அச் சிறுவனைத் தட்டிக்கொடுத்தான். அப்போது விரதன் தேம்பித் தேம்பி அழலாயினன். அதுகண்ட அந்தி இளைஞன் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு டிட்டுக்கைக்குட்டையினை எடுத்து அவன் கண்களைத் துடைததான. ." o i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/28&oldid=891126" இலிருந்து மீள்விக்கப்பட்டது