பக்கம்:வரதன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியும் பலகையும் | | அப்போது முருகன் தமையன்மார் இருவரும், வான் -வருகின்றேன்' , ' நான் வருகின்றேன் ' என்று க so முன்வந்து நின்றனர். அந்த ஆசிரியர், முருகன் மூத்த தமையனுகிய வந்த ரனத் தம்முடன் வரும்படி கூறி, இளைய தமயனுகிய கரு தனிடம், நீ அடிக்கடி போலீசுக்குச் சென்று விசாரித்து வா என்று சொல்லி, வரதனைத் தேடுவதற்கு உடனே புறப்பட்டுச் சென்ருர். அவ்விருவரும் சென்ற சிறிது நேரத்திற்குள், காவல் கிலேயக் காவலர் இருவர் வரதன் வீட்டைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்களுள் ஒருவன், ஒரு தொப்பியைக் கையில் வைத்துக்கொண்டிருந்தான் : மற்ருெருவன் பலகை புத்தகங்களை வைத்திருந்தான். அங்க்ே வந்ததும் அவர்களுள் ஒருவன், தாமோதரப் பிள்ளையை அழைத்துத் தொப்பியையும், Լ-1Gլ) ճյԾ) Ա, புத்தகங்களேயும் காட்டி, இவை யாருடையன என்ருன். அவைகளைக் கண்டதும் தாமோதரப்பிள்ளை, தம் மைந்தனையே கண்டதாக ஆனந்தித்தார் ; எங்கே வரதன் ?-எங்கே வரதன் என்று வினவிக்கொண்டே மிக்க ஆவலோடு அருகே வந்தார். அப்போது ("(リ'Ab வல்லியும் அங்கே விரைந்து வந்தாள். அவள் அக்காவலர் களை நோக்கி, ஐயா, எங்கே என் கண்மணி ?எங்கே என் செல்வன் ?-அவனைக் கண்டீர்களா ?. அழைத்து வந்தீர்களா ? என ஆவலோடு கேட்டாள். அதற்கு அவர்களில் ஒருவன், அம்மா, நாங்கள் உங்கள் மகனைக் காணவேயில்லே ' என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/58&oldid=891186" இலிருந்து மீள்விக்கப்பட்டது