பக்கம்:வரதன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வரதன் ஆல்ை, இவை உங்களுக்கு எங்கே கிடைத்தன? என்று மிக்க கவலையோடு கேட்டார் தாமோதரப்பிள்ளை. அதற்கு மற்ருெரு காவலின், ! ஐயா, நாங்கள் சுற்றி வரும்போது இரண்டு கரிவேடக்காரர்கள் மிகுதியும் குடித்துவிட்டு, ஒருவர்மே லொருவர் விழுந்து கொண்டு வந்தார்கள். ஆதலால், நாங்கள் அவர்களைப் பிடிக்கச் சென்ருேம். அப்போது, அவர்களுள் ஒருவன் இந்தத் தொப்பியையும், மற்ருெருவன் பலகை புத்தகங்களையும் வைத்திருந்தான்;-இவை எப்படிக் கிடைத்தன-என்று காங்கள் அவர்களைக் கேட்டபோது, முதலில் அவர்கள் மிரள-மிரள விழித்தார்கள். பின்னர் நாங்கள், அவர்களைக் காவல் கிலேயத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் உதையும், குத்தும் கொடுத்தோம். அப்போது அவர்கள், தாங்கள் வழியில் ஒரு சிறுவனக் கண்டதாகவும், அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதாகவும் கூறினர்கள். பிறகு காங்கள்-அச்சிறுவன் எங்கே ?-என்று கேட் டோம். அதற்கு அவர்கள், தங்களுக்குத் தெரியாது என்று சொன்னர்கள். நாங்கள் மேலும்-மேலும் உதையும் குத்தும் கொடுத்தோம் ; என்ன செய்தும் அவர்கள்-சாமி சாமி, எங்களை அடிக்காதீர்கள்; அவன் எங்கே போனனே எங்களுக்குத் தெரியவே தெரியாது - என்று ஒரே பிடியாகக் கூறிச் சத்தியம் செய்தார்கள். ஆதலால், நாங்கள் அவர்களைக் காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்திருக்கின்ருேம் என்ருன். இதனைக் கேட்டதும் தாமோதரப்பிள்ளை, பேசவும் வெழாது திகைத்து மரம்போன்று சிறிது நேரம் ன்ேருர். பிறகு அவர், ஐயோ! மகனே! என்று கூறி வென இரைந்து அழி ஆரம்பித்தார். குமுதவல்லியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/59&oldid=891189" இலிருந்து மீள்விக்கப்பட்டது