பக்கம்:வரதன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வரதன் எல்லோரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். செய்தி சொல்லவந்த காவலர் இருவரும் அசைவற்று நின்றிருந் தார்கள். அப்போது, அக்கம் பக்கத்தார் அனைவரும் அங்கே வந்து சூழ்ந்துகொண்டனர். இறந்தவர் வீட்டில் நடக்கும் செயல்களெல்லாம் அங்கே காணப்பட்டன வென்றே சொல்லுதல்வேண்டும். இவ்விதம் சிறிதுநேரம் சென்றது. அப்போது, அடுத்த விட்டி லிருந்த ஒரு பெரியவர் 1 தாமோதரப் பிள்ளையின் அருகே வந்து, ஐயோ, நீங்கள்.ஏன் இப்படி அழுகின்றீர்கள்? முதலில் செய்தியைச் சொல்லுங்கள் : என்று உரத்த குரலெடுத்துக் கேட்டார். அதற்குத் தாமோதரப்பிள்ளை, "ஐயோ! நான் என்ன வென்று சொல்லுவேன்-என் மகன் போய் விட்டானே-அவனை நான் எப்போது பார்ட்பேன் என்று கூறி அழுதார். என்ன ? போய்விட்டான ஐயா, அவன் எங்கே போய்விட்டான் ஊரில் பிள்ளைகள் போவதில்லையா ?மறுபடியும் அகப்படுவதில்லையா ? இதற்காகவா இப்படி அழவேண்டும் பள்ளி ஆசிரியர் ஒருபுறம்-நாம் ஒரு புறம்-போலீசார் ஒருபுறம்-இப்படி எல்லோரும் அவனைத் தேடிக்கொண்டு தானே இருக்கின்ருேம் ! இதற்குள் நீங்கள் ஏன் அழவேண்டும் என அப் பெரியவர் பலப்பல சொல்லிக்கொண்டே வரதன் அன்னை யின் அருகே சென்று, அம்மா குமுதவல்லி, நீ என்ன பைத்தியக்காரப் பெண்ணுக இருக்கின்ருய்? உன் மகனுக்கு இப்போது என்ன தீங்கு நேர்ந்துவிட்டதென்று நீ இப்படி ஆரவாரம் செய்கின்ருய் -இன்னும் தேடிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/61&oldid=891194" இலிருந்து மீள்விக்கப்பட்டது