பக்கம்:வரதன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66, வரதன் அவிழ்ந்து கிடந்த தன் கூந்தலைக் கோதி முடியிட்டுக் கொண்டு, என் மகன்-எங்கே? என் செல்வன் எங்கே?' என்று சொல்லிக்கொண்டே விரைந்தெழுங் தெருவிற்கு ஓடிவந்தாள். - i. வரதனைக் கண்டதும் அவள், அவனை வாரி எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டாள் அவனிடம் கொஞ்சிக் குலாவினுள் அவனுக்கு முத்தம் பல தந்தாள் என் கண்ணே, என் கிளியே, என் செல்வமே, நீ இத்துணே நேரம் எங்கேயடா சென்றிருந்தாய்?" என்ருள் ; உன் அன்னே பெரிதும் வருந்துவாள் என்பது உனக்குத் தெரியாதா?’ என்ருள் எந்தத் தெய்வமோ உன்னை இங்கே மறுபடியும் கொண்டுவந்து விட்டதே ' என்ருள்: நீர் வடிந்திருந்த அவன் கண்களைத் துடைத்தாள் முன் வந்து தொங்கிக்கொண்டிருந்த அவன் தலைமயிரைக் கோதினுள் -'ஆ வரதா, எங்கே உன் காதிலிருந்த குண்டலங்கள்! என்ருள் : அப்போது, வரதன் பேசு தற்கு வர்யெழாமல், தேம்பித்தேம்பி அழுதான். பின்னர் அவள், வரதன் கைகளிலும் கால்களிலும் இருந்த ஆபரணங்கள் பலவும் காணுமைக்குப் பெரிதும் வருந்தி ள்ை. பிறகு அவள், தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, என் கண்ணே, நீ அவைகளின் பொருட்டு வருந்த வேண்டாம். நீ எப்படியோ உயிர்பெற்று வந்தனையே ! அதுபோதும் என்று சொல்லி அவனுக்கு மறுபடியும் முத்தம் தந்தாள் முடிவில் அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்ருள். குமுதவல்லி, உள்ளே சென்றதும், கூடத்தில் மனேயிட்டு வரதன, அதன்மேல் உட்காரவைத்தாள் ; அவனுக்கு இருபுறமும் இரண்டு குத்துவிளக்குகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/73&oldid=891218" இலிருந்து மீள்விக்கப்பட்டது