பக்கம்:வரதன்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வரதன் ஆம் இப்பொழுதுதான் வரதன் ஆண்பிள்ளை போல் இருக்கிருன் என்ருன் கண்ணன். இவ்விதம் அவர்கள் அன்று இன்பமாகப் பேசிக் கொண் டிருந்தார்கள். பலநாள் திருடன் ஒருநாளில் அகப்படுவான் அல்லவா ? திருடியே பிழைத்துவந்த தாண்டவனும் ஒருநாள் போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்டான். ஆதலால் அவன், சிறைச்சாலை சேர்ந்து நெடுநாள் துன்புறவேண்டி வந்தது. - வரதன், கண்ணன், முருகன் இம் மூவரும் என்றும் பிரியாத் தோழர்களாகவே யிருந்தனர். வரதன் நாளடைவில் பராக்குப் பார்ப்பதை முற்றிலும் ஒழித்து விட்டான். ஆதலால் அவன், கல்வியில் நாளுக்குநாள் சிறந்தோங்கின்ை. தன் பிள்ளை நன்ருகப் படிப்பதை அறிந்து அவன் தாய்தந்தையர் மிகுதியும் களிப்பெய்தினர். வரதன், தன் தந்தை விரும்பிய வண்ணமே பீ. ஏ., எம். ஏ, முதலிய பரீட்சைகளில் தேறிப் பேரும் புகழும் பெற்றதோடு ஒர் அழகான பெண்மணி யினையும் திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டிக ளோடு இன்னும் இனிதே வாழ்ந்து வருகின்ருன். 'அவன் யார் ? அவன் எங்கே இருக்கின்ருன் என்று இதை வாசிக்கும் நீங்கள் கேட்கலாம். ஒருவன் பெயரைச் சொன்னலும் அவன் ஊரைச் சொல்லுதல் கூடாதல்லவா ?-வணக்கம் : வாழ்த்து. முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/87&oldid=891248" இலிருந்து மீள்விக்கப்பட்டது