உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகத்தியர் யார்? எங்கே?

111


உள்ளது என்பதும், அப்படி வாழ்ந்திருந்தாலும், அவர் தொல்காப்பியர்தம் ஆசிரியராய் இருந்திருத்தலியலாது என்பதும், அவரும் வடக்கிருந்து வந்த அகத்தியரும் ஒருவரே அல்லர் என்பதும், அவர் பொதியமலையில் தங்கித் தமிழ் பயின்று அதை வளர்த்து நிற்க, மற்றவர் வடக்கிருந்து வந்தவர் விந்திய மலைச் சாரலிலேயே தங்கியவராதல் வேண்டும் என்பதும், இருவரையும் ஒருவராகக் கருதி, அந்த வழியில் ஆராய்ச்சி செய்வது பொருத்தமற்றதென்பதும், அகத்தியம் என்ற இலக்கணம் சிறந்ததாய் இருந்திருப்பின், அது தொல்காப்பியத்தை ஒட்டி வாழ்ந்திருக்கும் என்பதும், இருந்ததாகக் கொள்ள நினைத்தாலும் அதன் காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செல்வதால் ஆராய்ச்சி பொருந்தாது என்பதும் அறிய வேண்டுவனவாகும். பொதிய மலையில் தமிழ் அறிந்த நல்ல பண்பாடுடைய ஒரு புலவர் வாழ, அதே பெயரோடு வடக்கே இமயத்திருந்து வந்து விந்திய மலையில் மற்றொரு புலவர் வாழ்ந்தார் என்று கொள்ளுவதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவதாகும்.

‘தென்தமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்என்றும் அவன் உறைவிடம் என்று கம்பன் காட்டுவது போன்று தமிழ் அகத்தயன் என்றும் பொதியில் வாழ்ந்தான். என்றும் வடநாட்டிலிருந்து வந்த அகஸ்தியன் விந்திய, மலைச்சாரலில் தங்கினான் என்றும் ஏற்றுக் கொள்ளல் நலம்.