உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

121


இந்த அடிப்படையில் இனித் தொல்காப்பியத்தைப் பற்றிக் காண்போம்.

தொல்காப்பியரைப் பற்றி வழங்கும் கதை நாட்டுக்குப் புதுவதென்று. தொல்காப்பியருக்கு ஆசிரியர் அகத்தியர் எனவும், அவர் தம் ‘பத்தினி'யை அழைத்து வரும்போது அவளைத் தொடலாகாது என ஆணையிட்டதாகவும், வழியிடை வெள்ளம் காரணமாகக் கோல் வழித் தொல்காப்பியர் 'பத்தினி'யைப் பற்றிக் கரை சேர்த்தார் எனவும், ஆதனால் ஆசிரியரும் மாணவரும் ஒருவரை ஒருவர் சபித்தனர் எனவும் வழங்கும் கதை நாட்டுக்கும் மொழிக்கும் இழுக்குத் தருவதாகும். இக்கதை நடந்தது என யாராவது நம்ப முடியுமா? நம்பினால், யாரைச் சந்தேகிப்பது? பத்தினியையா தொல்காப்பியரையா? அவர் ஆசிரியராகிய அகத்தியரையா? எனவே, இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அன்று.

மற்றும் அகத்தியனாரே தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்பதற்குச் சான்று என்ன? அப்படியே இருந்தாலும், அவர் எந்த அகத்தியர்? அகக்தியர் என்ற பெயருடன் ஒருவருககு மேற்பட்டவர் வாழ்ந்தார் என்பதை நான் இந்நூலில் மற்றொரு கட்டுரையில் காட்டியுள்ளேன். திரு. கா. சு. பிள்ளை அவர்கள் இக்கருத்தை வற்புறுத்தியுள்ளார்கள்[1] எனவே, எந்த அகத்தியர் எனக் காட்டுவது? அப்படியே தொல்காப்பியர் அகத்தியரிடம் பயின்றார் என்றாலும். அதை எங்காவது அவர் நூல் வழி எடுத்துக் காட்ட முடியுமா? பாயிரத்தில் அவரோடு பயின்ற மாணவரும் (அதங்கோட்டு ஆசான்) குறிக்கப் பெறுகின்றார். அகத்தியர் முன் அரங்கேற்றியதாக இல்லை. அகத்தியமே இன்று நாட்டில் வழக்கொழிந்துவிட்டது. பன்னிரு படலம் போன்ற


  1. தொல். எழுத்து. உரை முன்னுரை, பக் XXXIII,

வ.—8