பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

123


கினியர் திட்டமாக எடுத்து விளக்குகின்றார்[1]. அவர் உரையின்படி சாமவேதமாகிய இசை இருவருக்கும் பொதுவாய் உள்ளது. அமைப்பு முதலியன மாறியிருந்தாலும், பெயர் ஒன்றாய் உள்ளது. அந்த ஆய்வு நமக்குத் தேவை இல்லை. வேதவியாசர் வேதம் செய்வதற்குமுன் தொல்காப்பியர் நூல் செய்தார் என்பது இதனால் தெரிகின்றது. கங்கை சிந்து சமவெளியில் வந்து குடியேறிய ஆரியர் மெள்ள மெள்ள வேதங்களைச் செய்தார்கள் என்பதை அறிகிறோம். அவர்கள் வந்த காலத்தில் இருந்த இருக்கு வேதமே காலத்தால் மெள்ளப் பெருகிற்று என்றும் பின்பு நான்கு வேதங்களும் உருவாயின என்றும் கூறுவர் ஆராய்ச்சியாளர்[2]. எனவே, தொல்காப்பியர் வேதங்கள் உருவாவதன் முன்பே தம் காப்பியத்தை எழுதினார் எனக் கொள்ளல் வேண்டும். மன்னன் நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையத்து நூலை அரங்கேற்றினர் என்பது கூறப் பெற்றுள்ளது. அவனது காலமும் கடைச்சங்க காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முந்தியது என்பது ஆராய்ந்து உரைக்கப் பெற்றது. எனவே, கடைச்சங்க காலத்துக்கு நெடுங்கால முன்னரே தொல்காப்பியம் எழுந்து வாழ்ந்தது எனக் கொள்ளல் பொருந்தும். இனி, இத்தொல்காப்பிய நூல்வழி இரண்டொரு கருத்துக்களைக் காணல் ஏற்புடைத்தாம் என எண்ணுகின்றேன். இதுவரை கண்ட பாயிரம் அவரைப் பற்றிப் பிறர் எழுதியது. இனி அவர் எழுதிய நூல் வழியே சில கருத்துக்களைக் கண்டு அமைவோம்.


  1. நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். அவை தைத்திரியமும், பெளடிகமும், தலவகாரமும், சாமவேதமுமாம். இனி, இருக்கும், யசுவும், சாமமும், அதர்வணமும் என்பாருமுளர். இது பொருந்தாது. இவர் இந்நூல் செய்த பின்னர்ச் சின்னாள் ப்ல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற் றைச் செய்தாராகலின். (பாயிர உரை, நச்சி.)
  2. Vedic Age W. M. Apte p. 385.