தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
131
குறித்திருப்பது அதைத் தொகுத்தோர் மனநிலையை நன்கு காட்டுகின்றது. இரண்டையும் கூறியிருப்பினும் பொருத்தமாய் இருக்கும்.
இனி, மணவினைகளில் சில கரணங்கள் புகுத்தப்பட்ட காலம் தொல்காப்பியர் காலம் எனவும், அவை ஆரியர்தம் தீ வளர்த்தல், அம்மி மிதித்தல் போன்றன எனவும் சிலர் கூறுவர்; இதற்கு எடுத்துக்காட்டாக,
'கரணத்தின அமைந்து முடிந்த காலை’ (கற். 5)
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.' (கற். 4)
எனத் தொல்காப்பியர் கூறுவதைக் காட்டுவர். இவற்றிற்கு உரை கூறவந்த நச்சினார்க்கினியர், இந்தக் கரணங்களை வடநூலாரைக் கருதிச் சொன்னார் எனக் காட்டுகின்றனர். மற்றும், இக் கரணம் பற்றிக் கூறும்போது, ‘இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதல்நூல் ஆசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழந்ததென்று கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறும் கூறினார், எனக் காட்டுவர். அவர் கூற்றின்படி ஒர் ஊழிக்கு முன்பே தொல்காப்பியர் இந்நூல் செய்தார் என்பதும், இதற்கு முதல் நூல் தமிழ் மரபு பற்றிய இலக்கணமே என்பதும், அவர் காலத்தில் ஆரியர் கரணத்தொடு நாட்டில் வந்தமையின் அதையும் சேர்த்தே இதில் கூறினார் என்பதும் கொள்ளத்தக்கனவாய் உள்ளன. அவற்றை அப்படியே கொள்வதில் தவறு இல்லை. எனினும், அக்காலத்தில் ஆரியர் கரணம் அத்துணை அளவில் தமிழ்நாட்டில் கால் கொண்டுவிட்டது எனக் கொள்ள முடியாது. வடக்கே அக்காலத்தில் தம் வாழ்வுக்கும் வளத்துக்கும் ஆரியர் போராடிய காலமே அது. ஒருசிலர் இங்கே வத்தனர் எனக் கொள்ளவன்றி, அவர்தம் காரணங்களைத் தென்னாட்டில் புகுத்தும் அளவிற்கு அவர்தம் கை