உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நந்தரும் மெளரியரும்

177


கோசருக்காகப் படை எடுத்து வந்தனர் என்பதும், படை எடுப்பினும் தமிழ்நாட்டை அடக்கி ஆள முடியவில்லை என்பதும், எனவே அக்காலத்தில் தென்னாடு வடநாட்டினும் ஏற்றம் பெற்றே விளங்கியதென்பதும், அக்காலத்தில் வந்த கிரேக்க நாட்டுத் தூதுவர் மெகஸ்தனிஸ் இத்தமிழ் நாட்டை யும் புகழ்ந்துள்ளார் என்பதும், தமிழர் தலைநகரங்களில் சீன நாடு தொடங்கிக் கிரேக்க நாடு வரை உள்ள வணிகர்கள் மண்டிக் கிடந்தார்கள் என்பதும் தேற்றமாகும்.