உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வரலாற்றுக்கு முன்


ஒழுகி நின்றார்கள் என்பதையும் அவ்விமயத்து ஆரியர்கள் இருந்தார்கள் என்பதையும், அந்த இமயம் இயற்கையொடு பொருந்திய பெருமலை என்பதையும் புலவர் குமட்டுர்க் கண்ணனார், -

'கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்துஇலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே!
                                (பதிற். 11: 21-25)

எனக் காட்டுகின்றார். இமயவரம்பன் கொடையைக் கூற நினைத்தபோது புலவருக்குப் பாரதப் போரும், அதில் இடை நின்று உதவிய அக்குரன் பெயரும் நினைவுக்கு வர,

போர்தலை மிகுத்த ஈர்ஐம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை ஆண்மை
அக்குரன் அனைய கைவண் மையையே."
                          (பதிற். 14: 5.7)

எனப் பாராட்டுகின்றார். இவ்வாறு இமயவரம்பன் என்ற பெயர் பொருந்தும் வகையில் இவன் இமயம் வரையில் வெற்றி கொண்டு, அவ் வடநாட்டவரோடு தொடர்பு கொண்டிருந்தான் என்பதைக் காண்கின்றோம்.

இவனுக்குப் பின் ஆண்ட சேரன் செங்குட்டுவனும் இமயம் வரை இரு முறை படையெடுத்து வந்தவன் என இலக்கியங்கள் குறிக்கின்றன. இவனைப் பரணர் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தால் பாராட்டிச் சிறப்புச் செய்திருக்கின்றார். அவர் இவன் இமயம் வரை பெற்ற வெற்றிச் சிறப்பினை,

'கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக,
தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்