பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

21


பண்ணைத் தொழிலைப் பொறுத்த வரையில், அதனை நகர மக்கள் தமக்குள் முறை வைத்து ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது ஒவ்வொருவரும் அதில் ஈராண்டுக் காலம் உழைக்கினறனர் ஒவ்வொரு குடும்பமும் ஒரு குறிப்பிட்ட தொழிலை ஒரு பொருளியல்ப் பிரிவாக ஏற்றுச் செய்து வருகிறது வேலைநாள் நேரம் ஆறு மணியாகும் எல்லா ஆக்கப் பொருள்களும் பொதுப் பண்டக சாலைகளில் சேர்க்கப் படுகின்றன கணக்குப் புத்ததகத்தில் அவை பதியப் படுகின்றன; ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் அவற்றை அரசு பகிர்ந்தளிக்கின்றது நலவாழ்வு ஆக்கத்தினால் மட்டுமல்லாமல், மக்களது தேவைகளின் இயல்பான அளவைக் கொண்டும் உறுதி செய்யப் படுகின்றது கருத்தியல்வாரையர்கள் துறவிகள் அல்லர், எனினும் அவர்களுது தேவைகள் முறையானவை; அவர்கள் இன்பநலநாட்டத்தையோ குலவாழ்வையோ நாடுவதில்லை

மூர் காட்டியபடி, அந்த இரும்பூதான அரசின் நல்வாழ்க்கை மேன்மையான உட்டோப்பசு மன்னரின் சட்ட நடவடிக்கைகளைச் சார்ந்திருந்தது மூர் இவ்வாறு நம்பிக்கையும் ஊட்டினார் "பொறுத்திருங்கள், இன்னும் பல கருத்தியல் மன்னர்கள் தோன்றுவார்கள்" என்றார் ஆனால் அவர் தமது காலத்துச் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கான நடைமுறைக்குரிய இயல்பு வழியைச் சுட்டிக் காட்ட முடியவில்லை

கருத்தியல் நாடு பற்றிய மூரின் கதையைத் திரும்பச் சொன்ன இரால்ப்ஹைத்லோ தாயி என்ற சுற்றுலாவாளர் கனவியர் வாணர்களின் வாழ்க்கையை மிக ஒளிவான காட்சியில் வண்ணித்தார்; அதனைக் கண்டு அவர் காலத்து மக்களில் பலர் அத்தகையதோர் நாடு உண்மையில் இருப்பதாகவே நம்பிவிட்டனர். ஆனால்