பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வருங்கால மானிட சமுதாயம்


சொத்துக்களைத் தனக்குத்தானே சொந்தமாக்கிப் பெருக்கிக் கொள்கிற வரையிலும் அங்கு ஆனந்தம் இருக்காது ஒரு நாடு எவ்வளவு தான் செல்வ வளம் மிக்கதாயிருப்பினும், அந்நாட்டின் செல்வத்தை ஒரு சிலர் மட்டும் தமக்குள் பங்கு போட்டுக் கொள்வார்களேயானால், ஏனையோர் ஏழைமைக்கு இரையாகியே தீருவர் என்பதும் தானாகவே விளங்கும்"

ஆனால் உட்டோப்பியர் என்ற இலக்கியல் நாட்டில் காணப்படக் கூடிய ஓவியமோ முற்றிலும் மாறு பட்டதாகும் தனியார் உடைமை இல்லாதிருப்பதே இலக்கியல் சமுதாயத்தின் முதன்மைச் சிறப்பாகும் இலக்கிய நாட்டில் வாழ்க்கை சகலரின் உடல் உழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது சமுதாயக் கடமைகளை நிறைவேற்றுவதில் சிறிதுகாலமாக ஈடுபட்டுள்ளவர்களும் அறிவியலாளர்களும்தான் உடல் உழைப்பிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தனர் அங்கு ஏராளமான பொருள்வளம் உண்டு அவை அவரவர் தேவைக் கேற்ப பகிர்க்கப்படுகின்றன. பொது மக்கள் சமன்மையே அங்கு செங்கோல் ஒச்சுகிறது.

முறையான பகிர்வளிப்பதை மட்டும் கொண்ட முறை சமுதாய அமைப்பைக் கனவு கண்ட இடைக்கால குறிக்கோளர்களைப் போலன்றி, ஆக்கத்திளை அறிவு வார்ந்த முறையில் ஒழுங்கமைப்பதுதான் சமுதாய சமன்மைக்கான முன்தேவையாக இருக்க வேண்டும் என்று தாமசு மூர் கருதினார் நாடு பறந்த அளவில் ஆக்கத்தை ஒழுங்கமைப்பதுதான் அனைத்து மக்களது தேவை களையும் நிறைவு செய்யும் பயணீட்டுக் கோட்பாட்டை நடத்துவதை முடியத் தக்கதாக்கும் என்ற உண்மையின் அடிப்படையில்தான் அவர் இவ்வவாறு ஊகித்தார்

மூர் சித்திரித்துள்ள அத்தகைய சமுதாய் அமைப்பின் சில கூறுகள் வருமாறு: ஆக்கக் கைவினைப் பொருள்களின் அடிப்படையில் அமைந்துள்ள்து