பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வருங்கால மானிட சமுதாயம்


இத்தகைய சீரான வாழ்க்கையை அவர்கள் எய்துவர் என்பது அவரது கருத்து.

17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த கெர்ரார்டு வின்ஸ்டான்லி, சீன் மெகலியர், கபிரியேல் மாப்லி, மற்றும் 18ஆம் நூற்றாண்டில் வசித்த இயற்கை முறைமை என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியரான மோரெல்லி, மாபெரும் சமண்மை, பொதுவுடைமை கருத்தியல் நாடுகளின் பிற்காலத்தையும் ஆசிரியர்கள் ஆகிய எல்லோரும், காலத்தையும் வரலாற்றையும் கடந்த மாந்த இயல்புக்கும், மாந்த அறிவுக்கும், மாந்தனின் தூய நன்னெறிக் கோட்பாடுகள் எனக் கருதப்படுவனவற்றுக்கும்தான் வேண்டுகோள் விடுத்தனர்.

1649ஆம் ஆண்டு இன்னிளவேனில் பருவத்தில், ஆங்கில நாட்டு முதலாளியப் புரட்சி நடந்து வந்த காலத்தில், ஒரு சிறு சமூகத்தினர் இலண்டனுக்கு அருகிலிருந்த சர்ரே என்ற பகுதியிலுள்ள பொது நிலத்தில் குடியேறி அந் நிலத்தைக் கூட்டாக உழத் தொடங்கினர். அந்தக் குழுவினர் "தோண்டுவோர்" என அழைக்கப்பட்டனர். அவர்களின் தலைவரான வின்சுடான்லி என்ற அறிவுக்கோட்பாட்டுவாணர் தாம் எழுதிய உயர் நிலையில் உரிமையின் முறைமை அல்லது உண்மை அறத்தி மீட்சி (1952) என்ற நூலில் எல்லாக் குடிமக்களுக்கும் உண்மையான உரிமையை உறுதிப்படுத்தும் குடியரசு சமுதாயம் ஒன்றை வண்ணித்துக் காட்டினார்; அவர் மனித இயல்பின் தேவைகளை விவிலிய நூல் வெளியிடுவதாகச் கூறினார். அந்தச் சமுதாயத்தில் தனியார் உடைமையும் இல்லை; வாணிபமும் இல்லை. ஆக்கப்படும் எல்லாப் பொருள்களும் பொதுப் பண்டக சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன; அதிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கிறது.