பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

67


அதன் வரலாற்றுத்தன்மையும், விண்மீன்களும் கோள்களும் இயங்கும் இயக்கத்தின் நடைமுறையிலான முறைகளைப்பற்றிய அறிவிலிருந்துதான் தோன்றுகின்றன

அறிவியல் பொதுவுடைமைக் கொள்கையும் சமுதாய வளர்ச்சி முறைகளின் அடப்படையில்தான்் பொதுவுடைமை எதிர்காலத்தை விளக்குகின்றது இயல்பாகவே இந்தக் கொள்கை அந்த எதிர்காலத்தின் அனைத்து துணுக்கங்களையும் முன் கூட்டியே காண முடியாது என்பது உண்மைதான்் அது அந்த எதிர்காலத்தின் பொதுவான சித்திரத்தையும் பொதுத் தன்மைகளையும்தான்் சித்திரிக்கின்றது. ஆனால் அந்தச் சித்திரம் வியக்கத் தக்க வகையில் மிகவும் திட்பமாகக் காட்சியளிக்கின்றது இதற்குப் பதினான்கு நாடுகளின் சமன்மை அமைப்பு பட்டறிவை ஆய்ந்தாலே போதும்

தேவைக்கேற்ப பகிர்வு என்பது மக்களது மன உணர்வில், மனாப்பொங்கில் ஒரு மாறுதலை ஏற்படுத்த முனைகிறது பொதுவுடைமையின் கீழ் மக்களது உழைப்பின் அளவும் நிலையும் எவ்வாறிருந்தபோதிலும், அனைத்து மக்களும் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் முடிக்கத் தக்கதனைப் பெறுகின்றனர் அதில் உழைப்பு மேன்மை மிக்க அடிப்படையான தேவையாக மாறி விடுகிறது; சமுதாயம் முழுவதன் நலனுக்காகவும் தன்னால் முடிந்த மட்டிலும் நன்கு உழைக்கும் மனிதனின் இயல்பான வேட்கையை அது புலப்படுத்துகிறது

சமன்மையின் கீழும் கூட, உழைப்பின் நல்லொழுக்க் உள்ளோட்டமும், சமுதாயம் முழுவதற்கும் கிட்டிய வெற்றிகள் ஒவ்வொரு தனிஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றன என்ற திடமான நம்பிக்கையும் ஒரு தன்மையான பங்கினை வகிக்கின்றன

இந்த அடிப்படையின் மீதுதான் உழைப்பைப் பற்றிய-பொதுவுடைமைக் கண்ணோட்டம் உருவாகிறது;