பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

75


நாட்டுப் பொருளியல் உதவியையும் எதிர்பார்க்க முடியவில்லை மேலும் அது வலிந்து கவர்தலுக்குளாகக் கூடிய அச்சுறுத்தலையும் நிலையாக எதிர்நோக்க நேர்ந்தது

இத்தகைய சூழ்நிலையில் அந்நாடு தனது பொருளியலுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் மாறாக, தனது மிகக் குறைவான போரை முன்னிட்டு பிற்காலச் செல்வ அடிப்படைகளில் ஒர் அளவான பகுதியைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கும் நெருக்கடிக்கும் ஆளாயிற்று.

இறுதியாக, முற்றிலும் புதியதான் ஒரு சமுதாயத்தைக் கட்டியமைப்பதில் அதற்கு முன் பட்டறிவும் இருக்கவில்லை

எனினும் அதன்முன் உந்தாற்றல் ஊட்டும் ஒரு குறிக்கோள் இருந்தது; இந்தக் குறிக்கோளை எய்தும் வழியினைத் திறந்துவிடும் முறைகளைப் பற்றிய அறிவும் அதனிடம் இருந்தது; மேலும் இந்தக் குறிக்கோளை எட்டிப் பிடிப்பதற்கு அதனிடம் ஈடிணையற்ற ஆற்றலும் இருந்தது தன்னிடம் இல்லாதனவற்றை யெல்லாம் அந்த வழியில் செல்லும் போதே அது சம்பாதித்துக் கொண்டது; கற்றுத் தேற வேண்டியவற்றை யெல்லாம் வாழ்க்கையிலிருந்தே கற்றுக் கொண்டது.

முன்னாள் உருசிய பேரரசின் இடிபாடுகளின் மீது நவீன தொழில் நிலையங்களும் புதிய தொழில் துட்பங்களும் உதித்தெழுந்தன.

வாழ்க்கை நிலையில் செங்குத்தான் வளர்ச்சி ஏற்பட்டது; இன்று அதன் நிலை புரட்சிக்கு முந்திய காலத்தில் இருந்ததைக் காட்டிலும் ஆறுமடங்கு அதிகமாகும்.

சோவியத்து ஒன்றியம் தனது நாட்டில் நூற்றுக்கு இாறு கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர் எனப்-