பக்கம்:வருங்கால மானிட சமுதாயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வருங்கால மானிட சமுதாயம்


உயர்ந்த வளர்ச்சி நிலையைத் தனது பண்பாகப் பெற்றதாகும். அது பலவகைகளில் சமன்மையைக் காட்டிலும் தனிச் சிறப்புகள் மிக்க சமுதாயமாகும்; உரிய காலத்தில் அவை உண்மையில் மிகப்பெரும் சிறப்புக்களாகவும் திகழும்.

பொதுவுடைமை அமைப்பு ஒரு மும்முனைப் சிக்கலுக்கான தீர்வைத் திட்டமிடுகின்றது. அவையாவன: பொதுவுடைமையின் பொருளாயத, தொழில் நுட்ப அடிப்புடையை உருவாக்குதல் பொதுவுடைமை சமுதாய உறவுகளை உருவாக்குதல்; புதிய மாந்த அறிவு பெறச் செய்தல் ஆகியனவையாம். இவையனைத்தும் ஒரே காலத்தில் தீர்க்கப்படவேண்டும். சான்றாக, பொதுவுடைமையின் பொருளியல், தொழில் நுட்ப அடிப்படையின் தன்மை மிகப்பெரும் பொருளியல் செல்வத்தை அடையும் முடிக்கத்தக்கது மட்டுமல்லாமல் வேலை நேரத்தைக் குறைப்பதையும் தீர்மானிக்கின்றது. இது மக்களின் முழுமுதல் வளர்ச்சிக் கான முதற்பெறும் முன்தேவையாகும். ஏனெனில் வேலைக்குப் பின்னர் ஒருவருக்குக் கிட்டும் அமையத் தோடு இது நெருங்கிப் பிணைக்கப்பட்டதாகும். எனவே பொதுவுடைமையின் விளைவாக்க ஆற்றல்கள் வெறுமனே ஒர் உயர் நிலையை எட்டிப்பிடித்து வளர்ந்துள்ள பொதுவுடைமையின் விளைவாக்க ஆற்றல்கள் அல்ல; அவற்றின் புதிய குணத் தன்மைகள் உழைப்பின் ஆக்க ஆற்றலின் மிகப்பெரிய பேரெழுச்சியை உறுதி செய்ய வேண்டும்; அத்துடன் முதன்முதலில் அனைத்து சுமையான, திறமைக் குறைவான உடலுழைப்பையும் முற்றிலும் போக்குவது, வேளாண்மை உழைப்புக்கும் எந்திரத் தொழில் உழைப்புக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் கூடிய குறைந்த அளவுக்குக் குறுகச் செய்வது ஆகியவற்றோடு, தனது தன்மையிலும் ஒரு அளவான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.