பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 றால், பட்டினி, வேலையில்லாத்திண்டாட்டம், சுரண்டுதல் (exploitation), யுத்தம் முதலிய, சமூகத்தைக் கொடிய நாசத்திற்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்ற சகலவி தக் கேடுகளுக்கும் அஸ்திவாரம் வர்க்கப்போராட்டம் தானென் றும், வர்க்கப்பிரிவினைகள் ஒழிந்தால் மாத்திரமே சமூகத் தில் இன்பமும் எழிலும், செழுமையும் அமைதியும் வள ரத் துவங்குமென்றும் சோஷியலிஸ்டுகள் நன்றாக உணர்ந் திருக்கிறார்கள். இந்தக் காரியத்தில், பிரதானமாகப் பங்கு கொள்ள வேண்டியது, சோஷியலிஸ்டுகளின் மிக முக்கியமான கடமை. போராட்டம், முறையாக நடந்து கொண்டிருந்த போதிலும், சிற்சில சமயங்களில், இப்போராட்டத்தில் ஈடுபடுகிற வர்க்கங்களுக்கு, தாங்கள் எந்த லட்சியத்திற் காகப் போராடுகிறோமென்று கூட உணர முடிகிறதில்லை. ஆகவே, சுரண்டப்பட்டு அடக்கப்பட்டுக் கிடக்கிற வர்க்கத் தார்களை, வர்க்க போத முடையவர்களாகச் செய்ய வேண் டிய வேலை, சோஷியலிஸ்டுகளின் முக்கிய கடமைகளில் ஒன்று, வர்க்கங்களையும் அவற்றோடுகூட வர்க்கப் போராட் டத்தையும் முழுக்க முழுக்க ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த வர்க்க போதம் (Class Consciousness ) இன்றி யமையாதது. வர்க்க போதத்தோடு கூடிய வர்க்கப் போராட்டத்தை நடத்துகிறவர்களுக்குத்தான், வர்க்கப் பிரிவினைகளை சர்வ சங்காரம் செய்யத்தக்க விதத்தில், இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளைத் தலை கீழாக மாற்றி அமைக்க முடியும்.