பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்கப் போராட்டம் -:0:- முதலாளியும் தொழிலாளியும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஜமீன் தாரும் குடியானவனும் அன்யோன்ய மாக இருக்கவேண்டும். இவர்களுக்கு இடையில் நட்பை யும் சகோதரத்துவத்தையும் வளர்க்கவேண்டும். அவ்வாறு பட்டு வாழுகிற மக்களிடையில் வெறுப்பையும் துவேஷத்தையும் சோஷியலிஸம் பரப்பு கின்றதென்பதுதான், சோஷியலிஸத்தின் மீது சுமத்தப் படுகிற ஒரு முக்கியமான ஆட்சேபம். செய்யாமல், ஒன்று "முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையில், ஜமீன் தாருக்கும் குடியானவனுக்கும் மத்தியில், உடையவனுக் கும் இல்லாதவனுக்கும் நடுவில், போராட்டத்தைக் கிளப் புகிறவன் சோஷியலிஸ்ட். இவ்வர்க்கத்தார்களுக்குள்ளே கலவரத்தையும் அடிதடியையும் உண்டு பண்ணுகிறவன் சோஷியலிஸ்ட்.இம்சையையும், வெறுப்பையும், வர்க்கத் துவேஷத்தையும் தூண்டிவிட்டு, சமூகத்தில் பிரிவினைகளை யும் பிளவுகளையும் உண்டாக்கவும், கொடிய சண்டை சச் சரவுகளால் மனிதவர்க்கத்தின் புனிதமான ரத்தத்தை வெள்ளக்காடாய்ப் பெருக்கவும் முயற்சி செய்கிற பயங்கர மான இருகால் பூச்சாண்டி, சோஷியலிஸ்ட்." இதுதான் சோஷியலிஸ்டுகளைப்பற்றிய முதலாளிகளின் தீர்மானம்.