பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முதலாளி - தொழிலாளி வர்க்கப்போராட்டமானது, சோஷியலிஸ்டுகளுடைய 'தலைச் சோறு' (மூளை) சிருஷ் டித்த, ஒரு அக்கிரமமான, அதர்மம் நிறைந்த அநியாய சிருஷ்டி மாத்திரமே யென்றும், மற்றப்படி அது யதார்த்த வாழ்க்கையில் கூறுகிறார்கள். இல்லவேயில்லையென்றும் வர்க்கப்போராட்டத்திலிருந்து முதலாளிகள் விடுதலை பெற ஒரே ஒரு வழி, வர்க்கப்போராட்டத்தைப் பிரசா ரஞ் செய்து வருகிற கோஷ்டியாரை அல்லது கட்சியாரை உடனே கைது செய்து தண்டிப்பதுதானென்று அவர்கள் அரசாங்கத்துக்கு யோசனை சொல்கிறார்கள். சோஷிய லிஸ்டுகள் உலகத்தில் இல்லாமல் ஒழிந்துவிட்டால், வர்க் கப் போராட்டமும் உலகத்தில் இல்லாமல் ஒழிந்து போகு மென்று அவர்கள் சித்தாந்தம் செய்கிறார்கள். வர்க்கப் போராட்டத்தின் பலனாக, தொழிலாளர் கிளர்ச்சிகள் நடை பெறுகின்றன; ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுகின்றன; ஐதாக்கள் புறப்படுகின்றன; வேலை நிறுத்தங்கள் நிகழ்கின்றன. இவைகளையும் ஏன், இவற் றின் ஆதாரமான வர்க்கப் போராட்டத்தையும் முதலாளி கள் சட்ட விரோதமாக்கி விடுகிறார்கள். "நீதியையும் சமாதானத்தையும் காப்பாற்றுங்கள்" என்ற கோஷத்தைக் கிளப்புகிறார்கள். "சட்டத்தையும் ஒழுங்கையும்" காப் பாற்றும் சாக்கில், வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடும் தொழி லாளிகளையும் கிருஷிகாரர்களையும் (குடியானவர்களையும்) துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள்; பாணாத்தடிகளால் மண்டைகளைப் பிளந்து ரத்தக் காடாக்குகிறார்கள் (பிசாசு களின் சமாதானம்!). வர்க்கப் போராட்டத்தின் மூலகாரண