பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயுள்ள, சமூகத்தின் மாறுபாடுகளையும், நிலைமைகளின் மாற்றங்களையும் ஒரு முறையேனும் கண்ணெடுத்தும் பாராமல், அவர்கள், வர்க்கப்போராட்டமானது சமூகத்தில் நிலை நிற்பதல்ல வென்று சாதிக்கிறார்கள். நோயை வேரோடு பிடுங்கி யெறிவதற்குப் பதிலாக, நோயின் வெளித் தோற்றங்களை வஞ்சகச் சூழ்ச்சியால் பொதிந்து வைக்க ஆசைப்படுகிறார்கள். புண்ணை அகழ்ந்து தோண்டி யெறி வதுதான் மனிதத்தன்மை. அதுவன்றி, அதனைப்பொதிந்து மூடி மறைக்க முற்படுவது கபடமும் பலவீன தானே ? மும் ஆனால், முதலாளிகள் என்ன தான முழங்கினாலும்சரி, அவர்களுடைய கூலிப் பண்டிதர்களும் குற்றேவல் பத்தி ராதிபர்களும் என்னதான் குலைத்த போதிலும் சரி, சமூக வாழ்வில் வர்க்கப் போராட்டம் ஒழுங்காக, முறையாக, நடந்து கொண்டுதானிருக்கிறது. மதுரை மில்களிலும், பொன்மலை ஓர்க்ஷாப்பிலும், நெல்லிக்குப்பம் பாக்டரியி லும், பம்பாயிலுள்ள இருப்புப் பாதைகளிலும், லண்டனி லுள்ள மாட மாளிகை கூட கோபுரங்களின் அடியிலும், பிரான்ஸிலுள்ள துறைமுகங்களிலும், சைனாவிலுள்ள மலைப் பிரதேசங்களிலும், சிக்காகோவிலுள்ள பனி மண்டலங் களிலும், ஆஸ்திரேலியாவிலுள்ள சுர சுரங்கங்களிலும் நகரங் களிலுள்ள சட்ட நிரூபண சபைகளிலும், நாட்டுப்புறங் களிலுள்ள நில புலங்கள் தோட்டந் துரவுகளிலும், யுத்த களத்திலுள்ள கிடங்குகளிலும் ஊரெங்கும், நாடெங்கும், உலகமெங்கும் அல்லும் பகலும் அனுதினமும் வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டே யிருக்கின்றது. உலகத்