பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தின் நாலா பாகங்களிலும் நடந்து கொண்டிருக்கிற இந்த வர்க்கப் போராட்டத்தின் வெளித் தோற்றங்கள், இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ற மாதிரியில் மாறுபடலாம்; வேறு படலாம். லண்டனில் ஸ்தாபன ரீதியாக பலமாக ஸ்தா பிக்கப்பட்ட தொழிற் சங்கங்களின் மூலம்) நடந்த வேலை நிறுத்தம் முதல், மலையாளத்தில் எத்தகைய அமைப்பு மின்றி பொதுஜன எழுச்சியாலேயே நடந்த மாப்பிள்ளைக் கலகம் வரையில் வர்க்கப் போராட்டம் நானாவித ரூபங் களில் தோன்றி யிருப்பதைச் சரித்திர பூர்வமாக நீங்கள் பார்க்கலாம். ஆனால் எப்படியோ, வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறதென்பதை மாத்திரம் மறைக் கவோ, மறுக்கவோ முடியாது. வெறி பிரிட்டனில், சில நூற்றாண்டுகளாக முதிர்ச்சி யடைந் திருக்கிற முதலாளித்வத்திற்கும், ஆலைத் தொழிலாளிகள் முதல் சகலவித அடக்கப்பட்ட வர்க்கத்தார்களுக்கும் பரஸ் ரம் - ஒரு வர்க்கத்திற்கொரு வர்க்கம் - இடைவிடாது தொடர்ச்சியாகப் போராட்டம் நடந்து கொண்டி ருக்கிறது. ஜெர்மனியிலும் இத்தாலியாவிலும் பிடித்த பேயரசாகிய பாஸிஸம் தலைகால் தெரியாமல் பயங்கரமாக ஆட்சி புரிகிறதல்லவா? முதலாளித்வ சர்வா திகாரம் முகட்டைத் தொட்டு, எதேச்சாதிகாரத் திமிர் வாதம் அட்டகாசம் செய்கிறதல்லவா? அவ்விடங்களில் கூட, மிதமிஞ்சிய அடக்குமுறைகளுக்கிடையிலும், அளவு கடந்த குரூரங்களுக்கிடையிலும், தொழிலாளிகள் தங்க ளுடைய வர்க்கப் போராட்டத்தைத் தளர விடாமல் பலம் பெற நடத்தி வருகிறார்கள். நமது இந்திய நாடு பிரிட்