பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 டிஷ் ஏகாதிபத்யத்தின் காலடியில் கிடக்கிறது. உலகத் தில் இன்னும் பல தேசங்கள் பராதீனப்பட்டுக் கிடக்கின் றன. இவ்வாறு அந்நியர்களின்கீழ் அடிமைப்பட்டுக்கிடக் கும் தேசங்களில், வர்க்கப் போராட்டமானது, தேசீயப் போராட்டத்திலிருந்து தனித்துப் பிரிக்க முடியாதபடி அவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கூலி யில் காலணா கூட்ட வேண்டுமென்றும், வேலை நேரத்தில் ஐந்து நிமிஷம் குறைக்க வேண்டுமென்றும், குத்தகையும் வாரமும் குறைய வேண்டுமென்றும் வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவசியப்பட்டு, ஆரம்பிக்கப் படுகிற சின்னஞ் சிறு கிளர்ச்சிகள் அல்லது போராட்டங் கள், முடிவில், பலத்த ஏகாதிபத்யத்தைத் தலைகுப்புறக் கவித்துவதற்குரிய மகா பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங் களை விளைக்கிற ஓர் மகத்தான சுதந்தர யுத்தமாக உரு வெடுக்கிறது. இப்படியாக, திக்குத் திசைகளிலெல்லாம், வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய சமூக வாழ்வில் காணப்படும் பொருள் தேடும் முறையைச் சிறிது கவனியுங்கள். இரண்டு வழிக ளில் சம்பாத்தியம். ஒன்று, எலும்பு முறியத் தொழில் புரிவதற்குப் பிரதி பலன். இரண்டு, எத்தகைய தொழில் செய்யாவிட்டாலும், மற்றவர்கள் தொழில் புரிவதற்கு அவசியமான சாதனங்களை உடைமையாக்கி வைக்கின்ற சொத்துரிமையின் பிரதிபலன். பாக்டரிகளில் அல்லது தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்வதற்கா கக் 'கூலி' வாங்குகிறார்கள். பாக்டரி சொந்தக்காரன்,உற் பத்தி சாதனங்களின் மேலுள்ள தனது பாத்யதையைச்