பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சொல்லி, லாபம் சம்பாதிக்கிறான். பாக்டரி, முதலாளிக்குச் சொந்தமானதாயிருப்பதால், மற்றவர்களுக்கு வேலை கொடுக்கவும், கொடுக்காதிருக்கவும் அவனுக்கு சாத்தியப்படு கிறது. ஒரு வயிற்றுக் கஞ்சிக்காக வேண்டி, பிச்சைக் காசு மாதிரி யெறிகிற சில செம்புத் துட்டுகளுக்காக வேண்டி, பெரும்பாலான மக்களாகிய தொழிலாளர்கள், முதலாளி களின் அடிமைகளாய்ப் போகும்படி நேரிடுகிறது. பைசாவை ஒரு விஷயத்தை மறவாதீர்கள்! யந்திரங்களால் பணத் தைப் பிரசவிக்க முடியாது. உற்பத்தி சாதனங்களால், ரூபாய், அணா உற்பத்தி செய்ய இயலாது. முதலாளிகள் தேடும் திரவியத்தில் ஒவ்வொரு சல்லிக் காசும் தொழிலாளிகளின் உடம்பைச் சாறாகப் பிழியும் அரும்பாட்டின் பலனாகும். முதலாளிகளால் கட்டப்படுகிற சுகபோகக் கோட்டைகளின் ஒவ்வொரு அங்குல இடமும், தினந்தோறும் பத்துமணி நேரம் பன்னிரண்டுமணி நேரம் பாடுபட்ட போதிலுங்கூட, பட்டினி கிடந்து வாடி வதங்குகின்ற தங்களுடைய குடும்பங்களை ரக்ஷிக்க முடியாமல் பரதவித்துப் பெருமூச்சு விடுகிற எழை எளிய தொழிலாளி மக்களின் ரத்தத்தால் நிரப்பப் பட்டதாகும். தொழிலாளர்களின் கூலி குறையக் குறைய முதலாளிகளின் லாபம் ஏறிக் கொண்டே போகும். சுய லாபத்தை அதிகரிக்கும் பொருட்டு, தொழிலாளர் களின் கூலியை வெட்டிக் குறைக்க முயற்சி செய்யாத முதலாளியையும், கூலியை வெட்டிக் குறைக்கிற முதலாளி யின் சுரண்டு முறையிலிருந்து விடுதலையடையப் பிரயத் தனப்படாத தொழிலாளியையும் காண்பது துர்லபம், தன்