பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சௌகரியத்தைக் கவனியாமல் எந்த முதலாளியும் இருக்க மாட்டான்; எந்தத் தொழிலாளியும் இருக்கமாட்டான். நாலணாக் கூலியை நாலரையணாவாகவேனும் அதிகப் படுத்த வேண்டுமென்று விரும்பாத தொழிலாளியையும், இருபதாயிரம் ரூபாய் லாபத்தை இருபத்தையாயிரமாக்க வேண்டுமென்று விரும்பாத முதலாளியையும், தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. இங்கே தான் வர்க்கப் போராட்டம்! எங்கு சுரண்டுகிற வர்க்கம் முதலாளி வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் எல்லாவற்றையும், தனி உடைமையாக வைத் துக்கொண்டு, உழைப்பாளிகளின் ரத்தத்தை வியர்வை யாகச் சிந்த வைத்து, அதிலிருந்து லாபத்தைக் 'கொள்ளை கொள்ளையாக "த் திரட்டப் பேராசை கொள்கிறது. சுரண் டப்படுகிற வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் பொருள் உற்பத்தி செய்வதற்கு வேண்டிய சாதனங்கள் சொந்தமா யில்லாத காரணத்தால், உழைப்பு சக்தியை விலைக்கு விற்று,ஜீவனாம்சம் நடத்துகிறது. இந்த இரண்டு வர்க் கங்களும் அததனுடைய ஸ்தாபனங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இவைகளுடைய அபிலாஷைகளும் கோரிக்கைகளும் வேறுபட்டுமாத்திரம் இருக்கவில்லை; விரோதப்பட்டுமிருக்கின்றன. அதனால்தான், இவ்விரண்டு வர்க்கத்தார்களும் முதலாளிகளும் தொழிலாளிகளும் அவரவர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்திசெய்து கொள் வதற்காக, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக. சுருங்கச் சொன்னால் வர்க்கலாபங்களை ரக்ஷித்துக் கொள்வ தற்காக, ஸ்தாபனங்களை அமைத்துப் போராடுகின்றனர்.